கிளிநொச்சி மாவட்ட பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இத்தாவில் பகுதியில் இன்று (20) நபர் ஒருவரின் வீட்டிற்குள் திடீரென உள்நுழைந்த பளை பொலிசார் வீட்டில் ஜஸ் போதை பொருள் இருப்பதாக கூறி வீட்டினை சுற்றி வளைத்துள்ளனர்.
வீட்டில் ஐஸ் போதைப்பொருள் இருப்பதாக வீட்டில் இருந்த பொருட்களை களைத்து, வீட்டில் சமைத்து வைத்த உணவை கையால் கிளறி, வீட்டில் இருந்த குடும்ப பெண்ணிடம் உங்கள் ஆடைகளை கழற்றி பையினுள் போட்டு தாருங்கள் எனவும் கூறியுள்ளனர்.
உதவிக்கு பெண்பொலிசார் எவரும் இல்லாத நிலையில் வீட்டில் இருந்த பெண்களை பரிசோதனை செய்யப்போவதாகவும் கேட்டுள்ளனர்.
பின் வீட்டில் இருந்த குடும்ப தலைவரை எந்தவொரு தடயப்பொருட்களும் இல்லாமல் கைது செய்து சென்றுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் எந்தவொரு போதைபொருளுடனும் கைது செய்யப்படவில்லை எனவும் பொய் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.
இதே போன்று பல தடவைகள் பளை பொலிசார் இவ்வாறு அநாகரீகமாக நடந்து கொள்கிறார்கள் எனவும் தொடர்ச்சியாக தம் மீது இவ்வாறான அநீதிகள் இடம்பெற்று வருவதாகவும் மிகுந்த கவலை விடுத்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் கடந்த காலங்களில் போதைப்பொருள்களுடன் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வெளியில் வந்து திருந்தி வாழும் சமயத்தில் தொடர்ச்சியாக தம்மீது போலி குற்றச்சாட்டுக்கள் அவர் மீது போடப்பட்டு வருவதாகவும் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
இதே வேளை போதைப்பொருட்களை விற்பனை செய்பவர்கள் தற்போது பெண்களையே முன்னிலைப்படுத்தி வருகின்றார்கள். ஏனெனில் பெண்களை ஆண் பொலிசார் உடல் ரீதியாக பரிசோதனை செய்ய முடியாது என்ற காரணத்தால். பெண்கள் தங்களது அந்தரங்க உறுப்பு மற்றும் மார்புப் பகுதிகளில் வைத்தே போதைப் பொருட்களை கடத்தி விற்பனை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.