Browsing: இலங்கை

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவின் கருத்துக்கமைய இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் வண்டிகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் சேவையில் இருந்து நீக்கப்பட்ட 200 பஸ்கள் புனரமைக்கப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

தென்கிழக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு வந்த குடும்ப உறுப்பினர்களின் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அம்பாறை- சியம்பலாண்டுவ பிரதான வீதியின் தமண பொலிஸ் நியாயாதிக்க பகுதியிலுள்ள குருட்டு கந்த எனும் பிரதேசத்தில் இன்று (10) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் நான்கு பேர் காயமடைந்து சிகிச்சைகளுக்காக தமண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தமண பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி […]

இலங்கை பிரஜைகளாகிய ஒவ்வொருவரும் வெளிநாடுகளுக்கு 12 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமாக கடன்பட்டுள்ளனர் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார். கடந்த வருடம் ஒக்டோபர் மாத இறுதிக்குள் இலங்கை அரசாங்கம் வெளிநாடுகளுக்கு 28,095 பில்லியன் ரூபா கடனை செலுத்தாமல் மிகுதி வைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, வரிக் கொள்கையினால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை ஐக்கிய தொழில்முனைவோர் சங்கம் தெரிவித்துள்ளது.

நீதிமன்றத்தை தவிர்த்து 10 வருடங்களாக தலைமறைவாக இருந்த சந்தேகநபர் ஒருவர் மாவனெல்ல பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலை மாணவி ஒருவரை பலாத்காரம் செய்த சம்பவம் தொடர்பில் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் ஆஜராகாமல் நீதிமன்றத்தை தவிர்த்திருந்தார். Nortonbridge, Teburton தோட்டத்தில் வசிக்கும் 29 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் தாம் வாழ்ந்த தோட்டத்தில் 11 வயது பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் நோர்டன்பிரிட்ஜ் பொலிஸாரால் கைது செய்யப்படுவதற்கு தயாராக […]

அட்டன் – நோட்டன் பிரதான வீதியில் சவுத் வனராஜா பகுதில் பாரிய மரமொன்று வீதியின் குறுக்கே சரிந்து வீழ்ந்துள்ளமையினால் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது. இன்று காலை 09.45 மணியளவிலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தியப் பாதுகாப்பு அமைச்சின் இணைச் செயலாளர் பிரபாகர் மற்றும் அவரது கடற்படைக் குழுவினர் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் மரியாதை நிமித்தமாக வருகைதந்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டனர். இச்சந்திப்பில் திருகோணமலை துறைமுகத்தில் கப்பல் கட்டும் தளம் ஒன்றை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட்டது. திருகோணமலை துறைமுகத்தை மேம்படுத்துவதன் ஊடாக வங்காள விரிகுடாவில் பயணிக்கும் கப்பல்களுக்கு அவசர நிலையின் போது விரைவான சேவைகளை வழங்க முடியும் என இந்திய பாதுகாப்பு அமைச்சின் […]

பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸூக்கு எடுக்கப்பட்ட தொலைபேசி அழைப்பை அனுமதியின்றி பதிவு செய்து, அந்த தொலைபேசி உரையாடலை யூடியூபில் பதிவேற்றம் செய்து, பொது பாதுகாப்புக்கு எதிராக தவறு செய்ய தூண்டினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஒருவரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின் கமகே நேற்று உத்தரவிட்டுள்ளார். தொலைபேசி உரையாடலில் பதிவை யூடியூப்பில் பதிவேற்றம் செய்து, பொது அமைதியை சீர்குலைக்கும் விதமான குற்றத்தை செய்தமை […]

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்த சீனா ஒருபோதும் முற்படவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும், பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தனது நாட்டிற்கு வழங்கிய பொருளாதார ஆதரவுக்காகவும் அவர் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா சுமார் 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டிற்கு வழங்கியது என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். பேர்த் நகரில் நடைபெறும் 7 ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவுஸ்திரேலியா […]

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அயோத்தி ராமர் கோவிலில் தரிசனம் செய்வதற்காக இரண்டு நாட்கள் தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு உத்தரப்பிரதேசத்திற்கு சென்றுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் தங்கியிருந்த அவர், முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் துணை முதல்வர் பிரிகேஷ் பதேக் ஆகியோரை சந்தித்தார். இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உத்தரபிரதேசத்தில் தாம் வழங்கிய அன்பான விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவித்தார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியன் ஜெய்சங்கர் நேற்று மாலை பேர்த் நகரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்தார். இதன் போது இந்தியாவுடனான இருதரப்பு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து கவனம் செலுத்தப்பட்டது