Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: உலக
பணத்திற்கு ஆசைப்பட்டு உயிர் தோழியை கொன்ற பெண்ணுக்கு இத்தனை ஆண்டு சிறையா-நீதிமன்று அதிரடி தீர்ப்பு..!
ஒன்பது மில்லியன் அமெரிக்க டொலருக்கு ஆசைப்பட்டு தமது உயிர்த் தோழியைக் கொலை செய்ய சதி செய்த பெண்ணுக்கு 99 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்தக் கொலை அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் நிகழ்ந்தது. தம்மீது சுமத்தப்பட்ட கொலைக் குற்றச்சாட்டை 23 வயது டெனலி பிரேமர் ஒப்புக்கொண்டுள்ளார். இக்கொலை, ஜூன் 2, 2019இல் தண்டர்பர்ட் நீர்வீழ்ச்சிக்கு அருகிலுள்ள எக்லுட்னா ஆற்றின் கரையில் நடந்தது. அங்கு, 19 வயதான சிந்தியா ஹோஃப்மன் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அவரது உடல் ஆற்றில் வீசப்பட்டதாகவும் […]
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பண்டைய காலங்களில் பயன்படுத்தப்பட்ட கருவிகள், அன்றைய காலத்தில் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய தொழில்நுட்பம் போன்றவற்றைக் கண்டறிய அகழ்வாராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் அவர்கள் பழங்காலத்தின் பெருமையை கண்முன் கொண்டு வருவது மட்டுமின்றி பல அறியப்படாத அற்புதங்களையும் கண்டு பிடிக்கின்றனர். அப்படி அற்புதமான ஒன்றை கண்டுபிடித்துள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அதனை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளனர். பொதுவாக எந்த முட்டையையும் சில நாட்கள் மட்டுமே பழுதடையாமல் சேமிக்க முடியும். பின்னர் சிதைந்து போகும் அல்லது கெட்டுப்போய்விடும். […]
பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் டியாகோ கார்சிதீவு அகதிகளை நீண்ட காலம் தடுத்து வைப்பதற்கு ஏற்ற இடம் அல்ல என ஐக்கிய நாடுகளின் அகதிகள் நிறுவனம் கூறிய பின்னரும் அதே நிலை நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அங்கிருந்து மருத்துவ சிகிச்சைக்காக ருவாண்டாவிற்கு அனுப்பப்பட்ட பின்னர், அகதிகள் எதிர்கொண்ட பாலியல் வன்கொடுமை பற்றிய அறிக்கைகள் வெளிவந்துள்ளதாகவும் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. டியாகோ கார்சியாவிலிருந்து ருவாண்டாவிற்கு மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பப்பட்ட தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் தாங்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு […]
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட குடும்பத்தினர் கலிபோர்னியாவின் சான் மேடியோவில் செவ்வாய்க்கிழமை (13) அவர்களது வீட்டிற்குள் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆனந்த் சுஜித் ஹென்றி (42), அவரது மனைவி அலைஸ் பிரியங்கா (40) மற்றும் அவர்களது இரட்டைக் குழந்தைகளான நோவா மற்றும் நெய்தன் (4) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளவர்கள் ஆவர். துப்பாக்கிச் சூட்டு காயம் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் […]
உலகம் முழுவதும் பேஸ்புக் நிறுவனம் பெரிய செயலிழப்பைச் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேஸ்புக் பயனர்கள் X தளத்தில் எழுதியுள்ளனர். செயலிழப்பு குறித்து டவுன் டிடெக்டரில் 2,000க்கும் மேற்பட்ட அறிக்கைகள் காணப்பட்டதுடன், சுமார் ஒரு மணி நேரத்திற்குள், இந்த எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்து கிட்டத்தட்ட 5,000 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் பெரும்பாலான அறிக்கைகள் லண்டன், மான்செஸ்டர் மற்றும் லிவர்பூலில் இருந்து பதிவாகியுள்ளதுடன், அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா மற்றும் தாய்லாந்திலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து […]
டிஜிட்டல் மார்கெட் துறையில் பணியாற்றும் ஸ்பானிஷ் இந்திய மொடலான ஷாரதா என்னும் பெண், திருமணப் பெண்போல் லெஹங்கா உடை அணிந்து லண்டன் மெட்ரோவில் நடந்து திரிகிறார். சாலையில் நடந்து செல்லும் அவரை அங்குள்ளவர்கள் பார்த்து திகைக்கின்றனர். ஒரு சிலர் அவரை புகைப்படமும் எடுத்துக் கொள்கின்றனர்.
2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஐந்து நாட்களுக்குள் மூன்று தடவை ரோயல் அடிலெய்ட் வைத்தியசாலையின் (RAH) உதவியை நாடிய இலங்கையர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொவிட் தோற்று பரவலின் போது ரோயல் அடிலெய்ட் வைத்தியசாலையின் உதவியை 23 வயதுடைய இலங்கை பிரஜையான சசிந்தா பட்டகொடகே எனும் இளைஞர் கோரியுள்ளார். குறித்த இளைஞர் இறப்பதற்கு முன்னதாக இருமல் மற்றும் இரத்த வாந்தி எடுத்துள்ளதாக வைத்தியர்களிடம் கூறியுள்ளதாக தெரியவந்துள்ளது. 2020 ஆம் ஆண்டி இந்த […]
மரணம் நம்மை பிரிக்கும் வரை இணைபிரியா தம்பதிகளாக வாழ வேண்டுமென்பது பலரது எதிர்பார்ப்பு. ஆனால், முன்னாள் நெதர்லாந்து பிரதமர் ட்ரைஸ் வான் ஆக்ட் (Dries van Agt) மற்றும் அவரது மனைவி யூஜெனி (Eugenie) ஆகியோருக்கு கடந்த ஏழு தசாப்தங்களாக ஒன்றாக கழித்ததை போலவே ஒன்றாக இந்த வாழ்க்கையில் இருந்து விடைபெறுவது நோக்கமாக இருந்துள்ளது. இதன்படி, 93 வயதான இந்த தம்பதி இந்த மாதம் முதல் பகுதியில் கருணைக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இருவரும் கைகோர்த்து இறந்ததாக […]
இந்தோனேசியாவில் சனிக்கிழமை (10) நடந்த கால்பந்து போட்டியின் போது மின்னல் தாக்கி கால்பந்து வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சுபாங்கைச் சேர்ந்த 34 வயதான நபரொருவர் மேற்கு ஜாவாவில் உள்ள பாண்டுங்கில் உள்ள சிலிவாங்கி மைதானத்தில், எஃப்சி பாண்டுங் மற்றும் எஃப்பிஐ சுபாங் இடையே நடந்த போட்டியில் போட்டியிட்டுள்ளார். அப்போது திடீரென மைதானத்தின் நடுவில் நின்ற அவர் மீது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அமெரிக்க புவிவியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹவாய் தீவுக் கூட்டத்தின் பிக் ஐலண்ட் பகுதியில் ரிக்டர் 5.7 அளவுகோலில் இந்த நிலநடுக்கம் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் அந்தப் பகுதியில் நன்கு உணரப்பட்டுள்ளன. இருப்பினும், நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியதாக நிலையில், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அபாய எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது