28.4 C
Jaffna
September 19, 2024
உலக செய்திகள்

உடல் வண்ணங்களோடு பாலினத்தையும் மாற்றிக்கொள்ளும் Parrot Fish

உடலின் வண்ணங்களை அடிக்கடி மாற்றிக் கொள்ளும் மீனை கேள்விப்பட்டுள்ளீர்களா? இந்த மீனுக்கு கிளி மீன் என்று பெயர். ஆங்கிலத்தில் இதனை Parrot Fish என்று அழைக்கிறார்கள்.

கிளி மீன்கள் பவளப்பாறை வாழ்விடங்களில் வாழ்கின்றன. இந்த மீன்களில் 80 இனங்கள் காணப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை பசுபிக் பெருங்கடலில் காணப்படுகின்றன. 4 அடி வரை இருக்கும் இம் மீனினம் பவளப்பாறை மற்றும் அதன் மீது குவிந்திருக்கும் பாசி அவற்றின் முக்கிய உணவாக உட்கொள்கிறது.

பெரிய மீன்களிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காக இந்த கிளி மீன்கள் விருப்பம் போன்று நிறத்தை மாற்றிக் கொள்ளும். உதாரணத்துக்கு பாறை மீது இவை ஒட்டியிருந்தால் அதனுடைய நிறத்துக்கு இவை மாறி விடும்.

உலகில் வலிமையான பற்களை கொண்ட உயிரினங்களில் ஒன்றாக இந்த கிளி மீன் உள்ளது. இவை வெள்ளி அல்லது தங்கத்தை விட கடினமானவை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஒவ்வொரு கிளிமீனுக்கும் சுமார் 100 பற்கள் வரை இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்த மீன்கள் பவளப்பாறைகளை அதிகம் சாப்பிடுகின்றன. ஒரு பெரிய சைஸ் கிளி மீன் ஒரு ஆண்டில் நூற்றுக்கணக்கான கிலோ பவளப்பாறைகளை சாப்பிடும் தன்மை கொண்டது.

இந்த மீன்கள் இரவில் தங்களைப் போர்த்திக்கொள்ள ஒரு ஒட்டும் கூட்டை உருவாக்குகின்றன. இந்த செயல்பாடு அவைகளை ஒட்டுண்ணிகளிடமிருந்து பாதுகாக்கும். மேலும் வேட்டையாடுபவர்களிடமிருந்து அவற்றின் வாசனையை மறைக்கும் ஒரு பாதுகாப்பு பொறிமுறையாக செயல்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்

சில கிளிமீன்கள் அவை பெண்ணிலிருந்து ஆணுக்கு பாலினத்தை மாற்றும்போது அவற்றின் நிறங்களும் மாறுகின்றன. இது புரோட்டோஜினஸ் ஹெர்மாஃப்ரோடிடிசம் என்று அழைக்கப்படுகிறது. பாலின மாற்றம் காரணமாக, ஹார்மோன்கள் காரணமாக அவற்றின் நிற கலவையும் மாறுகிறது.

Related posts

லண்டனில் இலங்கை கிரிக்கெட் அணிக்கெதிராக ஆர்ப்பாட்டம்

User1

நைஜீரியாவில் விபத்தில் சிக்கிய எரிபொருள் கொள்கலன் வெடித்து சிதறியது – 48 பேர் பலி

User1

உயர்ந்துள்ள அமெரிக்க டொலரின் பெறுமதி!!

User1

Leave a Comment