28.4 C
Jaffna
September 19, 2024
இந்திய செய்திகள்சினிமா செய்திகள்

சிம்ரன் நடிக்கும் ‘தி லாஸ்ட் ஒன்’

தமிழ் திரையுலகின் ‘ஜெனிபர் லோபஸ்’ என கொண்டாடப்படும் நடிகை சிம்ரன் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘தி லாஸ்ட் ஒன்’ என பெயரிடப்பட்டு, அதன் பிரத்யேக போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது.

சுயாதீன திரைப்பட இயக்குநர் லோகேஷ் குமார் இயக்கத்தில் உருவாகும் ‘தி லாஸ்ட் ஒன்’ எனும் திரைப்படத்தில் கதையின் நாயகியாக சிம்ரன் தோன்றுகிறார். இந்த திரைப்படத்தை எ போர் ரி மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் தீபக் பஹா தயாரிக்கிறார்.‌ இந்த திரைப்படத்தில் நடிக்கும் ஏனைய நடிகர்கள், நடிகைகள் மற்றும் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நடிகையாக அறிமுகமாகி 28 வது ஆண்டில் பயணிக்கும் நடிகை சிம்ரனின் ‘தி லாஸ்ட் ஒன்’ எனும் திரைப்படம்-  திகில் மற்றும் ஃபேண்டஸி ஜேனரில் தயாராகிறது. இந்த திரைப்படம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளிலும் உருவாகிறது.

சிம்ரன் கதையின் நாயகியாக நடிக்கும் ‘தி லாஸ்ட் ஒன்’ திரைப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி இருப்பதால்… இந்த பான் இந்திய படத்தை பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் அதிகரித்திருக்கிறது.

Related posts

இயற்கை எரிவாயுவின் விலை அதிகரித்தது !!

User1

மீண்டும் பாலிவுட்டில் தனுஷ்… ஜோடியாகும் முன்னணி ஹீரோயின்!

User1

பசு கடத்துபவர் எனக் கருதி பள்ளி மாணவர் சுட்டுக் கொலை: ஹரியாணாவில் 5 பேர் கைது

User1

Leave a Comment