10ஆவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகள் 4, 5, மற்றும் 6 ஆகியவற்றின் விதிகளுக்கு அமைவாகும்.
கலாநிதி அசோக சபுமல் ரன்வலவின் நியமனத்தை பிரதமர் ஹரினி அமரசூரிய முன்மொழிந்ததுடன், வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் இந்த முன்மொழிவை உறுதிப்படுத்தினார்.
இதன்போது கருத்தவெளியிட்ட சபாநாயகர் அசோக ரன்வல, பாராளுமன்றத்தின் கௌரவம் மற்றும் சுயாதினத்தை முழுமையாக பாதுகாப்பேன். சகல உறுப்பினர்களின் உரிமைகளை பாதுகாப்பேன். அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில் அனைவரும் ஒன்றிணைந்து மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.