பிரான்ஸில் நடைபெற்றுவரும் பாரிஸ் 2024 பராலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்குபற்றிய இலங்கையின் மாற்றுத்திறனாளி நவீத் ரஹீம், முதல் சுற்றுக்கு அப்பால் முன்னேறத் தவறினார்.
புதன்கிழமை (28) ஆரம்பமான பாரிஸ் 2024 பராலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கை சார்பாக 8 மாற்றுத்திறனாளிகள் பங்குபற்றுகின்றனர்.
அவர்களில் முதலாவதாக நவீத் ரஹீம் நீச்சல் போட்டியில் பங்குபற்றினார்.
பாரிஸ் லா டிபென்ஸ் அரினா நீச்சல் தடாகத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற ஆண்களுக்கான S9 வகைப்படுத்தில் பிரிவு நீச்சல் போட்டிக்கான முதலாவது தகுதிகாண் சுற்றில் பங்குபற்றிய நவீத் ரஹீம் அப் போட்டியை 4 நிமிடங்கள், 42.71 செக்கன்களில் நிறைவுசெய்து கடைசி இடமான 5ஆம் இடத்தைப் பெற்றார்.
10 மாற்றுத்திறனாளிகள் பங்குபற்றிய இப் போட்டிக்கான 2 தகுதிகாண் சுற்றுகள் முடிவில் ரஹீம் ஒட்டுமொத்த நிலையில் 10ஆம் இடத்தைப் பெற்றார்.
இந்த பத்து மாற்றுத்திறனாளிகளில் முதல் 8 இடங்களைப் பெற்றவர்கள் இன்று இரவு நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் பங்குபற்றவுள்ளனர்.