27.9 C
Jaffna
September 16, 2024
இலங்கை செய்திகள்மட்டக்களப்பு செய்திகள்

களுவாஞ்சிக்குடி நீதிமன்றிற்கு வழக்கிற்காக அழைத்துவரப்பட்ட கைதி தப்பியோட்டம்

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி நீதிமன்ற வளாகத்தில் மலசலகூடத்திற்கு சென்ற தண்டனை பெற்ற கைதி ஒருவர் தப்பி ஓடிய சம்பவம் திங்கட்கிழமை (26) பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு உட்பட பல இடங்களில் கொள்ளையிட்ட சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்ற தண்டணை வழங்கப்பட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட கிளிநொச்சி இரணைமடு பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய கைதியை சம்பவதினமான நேற்று களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பாக சிறைக்காவலர்கள் அழைத்துச் சென்று அங்குள்ள கூண்டில் அடைத்து வைத்தனர்.

இந்த நிலையில் குறித்த கைதி நேற்று பகல் 12 மணியளவில் கூண்டில் இருந்து மலசலம் கழிப்பதற்காக சிறைக்காவலர் அழைத்து சென்று மலசலம் கழிப்பதற்கு விட்டுவிட்டு வெளியில் காவல் இருந்துள்ள நிலையில் கைதி மலசலகூட கூரையை கழற்றி அதனூடாக தப்பி ஓடியுள்ளார்.

இதனையடுத்து பொலிஸாரும் சிறைக்காவலர்களும் அவரை மீண்டும் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். 

Related posts

சாரதியின் பொறுப்பற்ற செயலால் நடுத்தெருவில் நின்ற பயணிகள்

sumi

புத்தளத்தில் ஆயுதமுனையில் பணம் கொள்ளை

User1

அனைவருக்கும் நன்றி-ஹரிகரன்

sumi

Leave a Comment