பல வருடங்களாக கொரியாவில் பணிபுரிந்து வந்த இளைஞன் ஒருவர் இலங்கைக்கு வந்து கொரியாவுக்கு திரும்பவிருந்த நிலையில் மரமொன்று முறிந்து விழுந்து ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக கம்பளை மரண விசாரணை அதிகாரி தெரிவித்தார்
கம்பளை போவல, பலடோர பிரதேசத்தில் வசிக்கும் 30 வயதான மகேஷ் சமரநாயக்க என்ற இளம் வர்த்தகரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவருக்கு திருமணமாகி கடந்த மார்ச் மாதம் கொரியாவில் இருந்து இந்த நாட்டுக்கு வந்துள்ளார்.
நாட்டுக்கு வந்த பிறகு காணிகளை வாங்கி மரம் வெட்டும் தொழிலைத் தொடங்கியுள்ளார்.
கொரியாவுக்குச் செல்வதற்கு முன், மரம் அறுக்கும் ஆலையில் பணிபுரிந்த அவர், அந்த தொழில் அனுபவங்களை வைத்து ,மரம் வெட்டும் தொழிலை துவக்கி உள்ளார்.
கம்பளை கல்பய, லந்தன்ஹில் காலனியில் சில மரங்களை வாங்கி, அந்த மரங்களை மற்ற இருவருடன் இணைந்து கடந்த 10ஆம் தேதி வெட்டத் தொடங்கினார்.
எழுபது அடி உயர மரம் ஒன்றை கயிற்றால் கட்டி வெட்டிய போது அனர்த்தம் ஏற்பட்டது.
வெட்டப்பட்ட அந்த மரத்தின் தண்டு அவரது தலையில் விழுந்தது.
காயமடைந்த நபர் கம்பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவர் தனது மனைவியுடன் கொரியாவுக்குத் திரும்பவிருந்தபோது இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தை எதிர்கொண்டார்.