ஹங்கேரிய ஜனாதிபதி கேட்டலின் நோவக் தனது பதவியை சனிக்கிழமை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
சிறுவர் காப்பகத்தில் சிறார்களை வன்புணர்வுக்கு செய்த குற்றவாளி ஒருவருக்கு பொதுமன்னிப்பு வழங்கும் அவரது தீர்மானத்திற்கு பரவலாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கேட்டலின் நோவக் எடுத்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
‘நான் தவறு செய்துவிட்டேன். அதனால்தான் ஜனாதிபதியாக இதுவே எனது கடைசி உரையாகும். தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவாததற்கு மன்னிக்கவும். “சிறு குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்களின் பாதுகாப்பில் நான் உறுதியாக இருக்கிறேன்,” என ஜனாதிபதி கேட்டலின் நோவக் நேற்று ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
பாலியல் வன்கொடுமை வழக்கின் குற்றவாளிக்கு பொதுமன்னிப்பு வழங்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் மற்றும் போராட்டக்காரர்கள் ஜனாதிபதியின் இல்லத்திற்கு எதிரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பில் ஏற்பட்டுள்ள எதிர்க்கட்சிகளின் கடும் அழுத்தங்கள் காரணமாக அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதியின் ராஜினாமா குறித்து முன்னாள் நீதி அமைச்சர் ஜூடித் வர்கா பதிலளித்துள்ளார்.. பொது வாழ்வில் இருந்து விலகுவதாக கேட்மலின் நோவக் அறிவித்துள்ளார். 2022ல் ஹங்கேரியின் முதல் பெண் ஜனாதிபதியாக கேட்டலின் நோவக் தெரிவு செய்யப்பட்மை பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், சிறுவர் காப்பகத்தின் முன்னாள் பிரதிப் பணிப்பாளருக்கு ஜனாதிபதி, பொதுமன்னிப்பு வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகத்தை மறைக்க, குழந்தைகள் காப்பகத்தின் உரிமையாளருக்கு குற்றவாளி உதவியதாக தெரிவருகிறது.
குற்றவாளிக்கு பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பான தீர்மானம் கடந்த ஆண்டு ஏப்ரலில் எடுக்கப்பட்டாலும், கடந்த வாரமே அரசு அதனை அறிவித்தது. இதளை இதனையடுத்து ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.