இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பினை ஏற்று, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட கட்சியின் பிரதிநிதிகள் இன்று இந்தியாவிற்குச் செல்கின்றனர். ‘எட்கா’ உடன்படிக்கையை நிறைவேற்ற மீண்டும் தயாராகிவரும் நிலையில், அதற்கு ஆதரவு கேட்கவே அநுரகுமாரவை இந்திய அரசாங்கம் அழைத்துள்ளதாக அறியமுடிகின்றது.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க, செயலாளர் வைத்திய நிபுணர் நிஹால் அபேசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், தேசிய நிறைவேற்று பேரவை உறுப்பினர் பேராசிரியர் அனில் ஜயந்த ஆகியோரே இந்தியாவிற்குச் செல்கின்றனர்.