உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

நிந்தவூர் கடல் அனர்த்தம்: காணாமல் போன மற்றைய மாணவரின் சட@லமும் பொத்துவில் கோமாரி கடற்பரப்பில் மீட்பு 

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
142 பார்வைகள்

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் கடற்கரையில் கடந்த வெள்ளிக்கிழமை (20) கடலில் நீராடச் சென்று அலையில் இழுத்துச் செல்லப்பட்டுக் காணாமல் போயிருந்த மற்றைய மாணவரின் சடலமும் நள்ளிரவு பொத்துவில் – கொமாரி கடற்பகுதி நீரோட்டத்தில் அப்பகுதி மீனவர்களால் மீட்கப்பட்டுள்ளது.

இச்சோகச் சம்பவம் குறித்த முழுமையான விவரங்கள் வருமாறு:

மாணவர்களைக் காப்பாற்ற முயன்று கடலில் காணாமல் போயிருந்த நவ்ஷாத் ஹஃபுனத் (வயது 23) என்ற இளைஞரின் சடலம் நேற்று (21) முற்பகல் மீட்கப்பட்டிருந்த நிலையில், காணாமல் போயிருந்த மொஹம்மட் அன்பர் ஆத்தீப் (வயது 19) என்ற மாணவரின் சடலமே கொமாரி கடற்பரப்பில் மீனவர்களால் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட மாணவரின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பதற்காகவும் பிரேதப் பரிசோதனைக்காகவும் தற்போது நிந்தவூர் ஆதார வைத்தியசாலை சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இச்சம்பவத்தின்போது உயிருடன் மீட்கப்பட்ட நிலாம் அப்துல்லா ஆபித் (வயது 17) என்ற மாணவர் அம்பாறை பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவத்தின் பின்னணி:
கடந்த வெள்ளிக்கிழமை (20) மதியம் ஐந்து மாணவர்கள் நிந்தவூர் கடற்கரைக்குச் சென்றிருந்த நிலையில், அவர்களில் இருவர் கடலில் இறங்கி நீராடியுள்ளனர். இதன்போது எதிர்பாராத விதமாக ஒருவர் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டதைத் தொடர்ந்து கரையிலிருந்த ஏனைய மாணவர்கள் அபயக்குரல் எழுப்பியுள்ளனர்.

அவர்களின் கூக்குரலைக் கேட்ட அப்பகுதியிலிருந்த பொதுமகனான நவ்ஷாத் ஹஃபுனத், உடனடியாகக் கடலில் குதித்து அலையில் சிக்கியிருந்த நிலாம் அப்துல்லா ஆபித் என்ற மாணவரைப் போராடி மீட்டுக் கரைக்குக் கொண்டு வந்துள்ளார். தொடர்ந்து, கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மற்றைய மாணவரான மொஹம்மட் அன்பர் ஆத்தீப்பைக் காப்பாற்றுவதற்காக அவர் மீண்டும் கடலுக்குள் சென்றபோது, எதிர்பாராத விதமாக அவரும் குறித்த மாணவரும் பாரிய அலையில் அடித்துச் செல்லப்பட்டுக் காணாமல் போயினர்.

சம்பவம் இடம்பெற்றது முதல் நிந்தவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் தலைமையிலான பொலிஸார், இராணுவத்தினர், இலங்கை கடற்படையினர் ஆகியோர் நவீன ட்ரோன் (Drone) தொழில்நுட்பத்தின் உதவியுடன் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர். இதற்கு மேலதிகமாக, சாய்ந்தமருது ஜனாஸா பேரவை, கல்முனை ஆழ்கடல் மீட்புக் குழுவினர் மற்றும் நிந்தவூர் ஜனாஸா நலன்புரி அமைப்பு உள்ளிட்ட தன்னார்வ மீட்புக் குழுவினரும் தேடுதல் பணிகளில் இணைந்திருந்தனர்.

மற்றொரு உயிரைக் காப்பாற்றுவதற்காகத் தனது உயிரைப் பணயம் வைத்த இளைஞரும், இளம் மாணவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளமை நிந்தவூர் மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேச மக்களிடையே பெரும் சோகத்தையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

மல்வத்தை கோர விபத்து: தீவிர சிகிச்சை பெற்று வந்த மற்றைய இளைஞரும் உயி@ரிழப்பு!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (20) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி ஆகியன மோதிய கோர விபத்தில்…

128 0 0
அம்பாறை செய்திகள்

நிந்தவூர் கடலில் காணாமல் போன இளைஞர்கள் இருவரையும் தேடும் பணிகள் தீவிரம்!

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் கடற்கரையில் இன்று (20) மதியம் கடலில் நீராடச் சென்றவர்களில் திடீரென அலையில் இழுத்துச் செல்லப்பட்டவர்களுள் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு அம்பாறை பொது வைத்தியசாலையின்…

172 0 0
அம்பாறை செய்திகள்

மோட்டார் சைக்கிளும் லொறியும் மோதி கோர விபத்து: 23 வயது இளைஞன் உயி@ரிழப்பு

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் இன்று (20) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி ஆகியன மோதிய கோர விபத்தில்…

160 0 0
அம்பாறை செய்திகள்

நிந்தவூரில் கடலில் நீராடச் சென்ற இருவர் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர்!

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் கடற்கரையில் இன்று (20) மதியம் கடலில் நீராடச் சென்ற இருவர் திடீரென அலையில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில்இ ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு அம்பாறை…

134 0 0