உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தியே தனித்த கட்சி உருவாகக் காரணம் – காதர் மஸ்தான்

இலங்கை செய்திகள் 46 நிமிடங்கள் முன்
125 பார்வைகள்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தி உள்ளிட்ட பல்வேறு காரணங்களே தனித்த அரசியல் கட்சியை உருவாக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.

கட்சியின் அரசியல் நடவடிக்கைகளை அம்பாறை மாவட்டத்தில் விரிவுபடுத்தும் நோக்கில், இன்று (22) சாய்ந்தமருதில் உள்ள தனியார் விடுதியில் கட்சி ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஜனாசா எரிப்பு விவகாரம் இடம்பெற்ற காலப்பகுதியில் பல்வேறு அரசியல் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும், அப்போது எடுக்கப்பட்ட சில அரசியல் நிலைப்பாடுகள் சமூகத்தின் எதிர்பார்ப்புகளுக்கு முரணாக அமைந்ததால் அதிருப்தி ஏற்பட்டது.

அந்தக் காலப்பகுதியில் முன்னாள் அமைச்சர் அலி சப்ரி உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகளுடன் பல்வேறு கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாகவும், ஜனாசா எரிப்பு தொடர்பில் ஆராய்வதற்காக குழுவொன்று அமைக்கப்பட்டு அறிக்கையும் வெளியிடப்பட்டிருந்தது.

எனினும், குறித்த நடவடிக்கைகள் எதிர்பார்த்த வகையில் அமையாத நிலையில், சமூகத்தின் அரசியல் அபிலாஷைகளை சுயாதீனமாக பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும், தனித்துவமான அரசியல் நிலைப்பாட்டுடன் செயல்படுவதற்கும் தனியான அரசியல் கட்சியொன்றின் தேவை உணரப்பட்டது.

இதன் அடிப்படையில் புதிய அரசியல் கட்சி உருவாக்கப்பட்டதாகவும், கட்சி உருவான பின்னர் கொழும்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வெளிநாடுகளிலும் உள்ள ஆதரவாளர்கள் தமது அரசியல் நடவடிக்கைகளுக்கு வரவேற்பளித்ததாகவும் தெரிவித்தார்.

அம்பாறை, மட்டக்களப்பு உள்ளிட்ட மாவட்டங்களில் கட்சியின் அரசியல் செயற்பாடுகளை விரிவுபடுத்துவதற்கான அழைப்புகள் கிடைத்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் பிரதேச மட்டத்தில் கட்சியின் கட்டமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும்
கல்முனை மாநகரசபை மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்களில் கட்சியின் அரசியல் செயற்பாடுகளை வலுப்படுத்துவதற்காக பல்வேறு சந்திப்புகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், மக்களின் பிரச்சினைகளை நேரடியாக அறிந்து அவற்றுக்கு தீர்வுகளை முன்வைக்கும் அரசியலை முன்னெடுப்பதே தமது நோக்கமாகும் என்றும் தெரிவித்தார்.

மக்களை ஏமாற்றும் வாக்குறுதிகளை வழங்குவதோ, அச்சுறுத்தல் அரசியலை முன்னெடுப்பதோ தமது கட்சியின் நோக்கமல்ல எனக் குறிப்பிட்ட அவர், நேர்மையான, நியாயமான அரசியல் நடைமுறையை முன்னெடுக்க விரும்புவதாகவும்
எதிர்வரும் தேர்தல்களை இலக்காகக் கொண்டு ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவு மற்றும் வட்டார மட்டத்திலும் கட்சியின் கட்டமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், அதற்காக பிரதேசத்தின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் மற்றும் சமூகத் தலைவர்களின் ஆலோசனைகளைப் பெற்று செயற்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஹட்டன் நகரில் தொடர் கொள்ளை!

இன்று காலை (22) ஹட்டன் நகரில் உள்ள பின் சாலையில் அமைந்துள்ள 4 கடைகளில் திருடன் புகுந்துள்ளதாக ஹட்டன் காவல்துறை தெரிவித்துள்ளது. தங்கப் பொருட்கள் தயாரிக்கும் 3…

117 0 0
இலங்கை செய்திகள்

மல்வத்தை கோர விபத்து: தீவிர சிகிச்சை பெற்று வந்த மற்றைய இளைஞரும் உயி@ரிழப்பு!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (20) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி ஆகியன மோதிய கோர விபத்தில்…

128 0 0
இலங்கை செய்திகள்

நிந்தவூர் கடல் அனர்த்தம்: காணாமல் போன மற்றைய மாணவரின் சட@லமும் பொத்துவில் கோமாரி கடற்பரப்பில் மீட்பு 

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் கடற்கரையில் கடந்த வெள்ளிக்கிழமை (20) கடலில் நீராடச் சென்று அலையில் இழுத்துச் செல்லப்பட்டுக் காணாமல் போயிருந்த மற்றைய மாணவரின் சடலமும் நள்ளிரவு பொத்துவில்…

141 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நான்கு மாகாண சபைகளுக்கு 2027 நடுப்பகுதியில் தேர்தல்?

2027ஆம் ஆண்டு நடுப்பகுதியில் வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய நான்கு மாகாணங்களுக்கான மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு உத்தேசித்துள்ளதாக அரசு, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளது…

112 0 0