உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பாரவூர்தி 80 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து : மூவர் வைத்தியசாலையில் அனுமதி

இலங்கை செய்திகள் 4 மணி நேரம் முன்
122 பார்வைகள்

.பாரவூர்தி 80 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் நேற்று மாலை 6.00 மணிக்கு நல்லதண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மரே தோட்ட புதுகாடு பிரிவில் இடம் பெற்று உள்ளது.

தனியார் ஒருவருக்கு உரித்தான பாரவூர்தி ஒன்று அதன் உரிமையாளரினால் செலுத்தி சென்று மரே தோட்ட புதுகாடு பிரிவில் தேயிலை கொழுந்து ஏற்றிக் கொண்டு திரும்பி தேயிலை தொழிற்சாலைக்கு கொண்டு செல்லும் போது புதுகாடு பிரிவில் வைத்து வீதியை விட்டு விலகி 80 அடி பள்ளத்தில் கவிந்ததால் அதில் பணியாற்றிய தர்ம்மவர்தன வயது 73 மகேஸ்வரன் வயது 55 மலர் செல்வம் வயது 45 ஆகிய மூன்று பேரும் படுகாயமடைந்த நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட்டு உள்ளனர்.

இவ் விபத்தில் உயிர் இழப்புகள் இல்லை எனவும் எழும்பு முறிவுகள் ஏற்பட்டு இருக்கலாம் என மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த விபத்து பற்றிய விரிவான விசாரணைகளை நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேற் கொண்டு வருகின்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தியே தனித்த கட்சி உருவாகக் காரணம் – காதர் மஸ்தான்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தி உள்ளிட்ட பல்வேறு காரணங்களே தனித்த அரசியல் கட்சியை உருவாக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர்…

124 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டன் நகரில் தொடர் கொள்ளை!

இன்று காலை (22) ஹட்டன் நகரில் உள்ள பின் சாலையில் அமைந்துள்ள 4 கடைகளில் திருடன் புகுந்துள்ளதாக ஹட்டன் காவல்துறை தெரிவித்துள்ளது. தங்கப் பொருட்கள் தயாரிக்கும் 3…

117 0 0
இலங்கை செய்திகள்

மல்வத்தை கோர விபத்து: தீவிர சிகிச்சை பெற்று வந்த மற்றைய இளைஞரும் உயி@ரிழப்பு!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (20) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி ஆகியன மோதிய கோர விபத்தில்…

128 0 0
இலங்கை செய்திகள்

நிந்தவூர் கடல் அனர்த்தம்: காணாமல் போன மற்றைய மாணவரின் சட@லமும் பொத்துவில் கோமாரி கடற்பரப்பில் மீட்பு 

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் கடற்கரையில் கடந்த வெள்ளிக்கிழமை (20) கடலில் நீராடச் சென்று அலையில் இழுத்துச் செல்லப்பட்டுக் காணாமல் போயிருந்த மற்றைய மாணவரின் சடலமும் நள்ளிரவு பொத்துவில்…

141 0 0