உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மன்னாரில் இடம்பெற்ற மாவீரர் பெற்றோர், உரித்துடையோர் கௌரவிப்பு நிகழ்வு

இலங்கை செய்திகள் 5 மணி நேரம் முன்
141 பார்வைகள்

மன்னார் மாவட்ட மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு குழுவின் ஒழுங்கமைப்பில் மாந்தை மேற்கு, மன்னார் நகர் பிரதேசத்தைச் சேர்ந்த 55 கிராமங்களில் இருந்து 500 க்கு மேற்பட்ட பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை (21) மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.

பேரெழுச்சியுடன் நடந்த இப்புனித நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோணி பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்கள் சிறப்பாக வருகை தந்து மாவீரர்களின் பெற்றோர்களை வரவேற்கும் நிகழ்வில் பங்கேற்று ,பொது படத்திற்கு மலர் மாலை அணிவித்து வணக்கம் செலுத்தி ஆசியுரை வழங்கி மதிப்பளித்தார்.

பொதுச் சுடரினை மாவீரர் வசீகரன் அவர்களின் தாயார் திருமதி. சி. அன்ன ரோஸ் சில்வா ஏற்றினார்.

பொது படத்திற்கான இரண்டாவது மாலையினை மாவீரர் செந்தில் அவர்களின் சகோதரர் ஜெகநாதன் அணிவித்தார்.நினைவுச் சுடரினை மாவீரர் திருநிலா அவர்களின் தந்தையார் திரு. மருதநாயகம் ஏற்றினார்.

மலர் வணக்கத்தை இரண்டு மாவீரர்களான எல்லாளன், சுதாகரன் அவர்களின் தாயார் திருமதி .யசிந்தா ஆரம்பித்து வைத்தார்.தொடர்ந்து வருகை தந்த அனைவரும் சுடரேற்றி , மலர் வணக்கம் செலுத்தும் உணர்வுபூர்வமான நிகழ்வு இடம்பெற்றது.

இதனைத் தொடர்ந்து மாவீரர்கள் நினைவு சுமந்த உரைகள்,கவிதைகள்,நடனங்கள் உணர்வு மிக்கதாக இடம்பெற்றன.இத்துடன் பெற்றோர்களுக்கு நினைவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தியே தனித்த கட்சி உருவாகக் காரணம் – காதர் மஸ்தான்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தி உள்ளிட்ட பல்வேறு காரணங்களே தனித்த அரசியல் கட்சியை உருவாக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர்…

124 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டன் நகரில் தொடர் கொள்ளை!

இன்று காலை (22) ஹட்டன் நகரில் உள்ள பின் சாலையில் அமைந்துள்ள 4 கடைகளில் திருடன் புகுந்துள்ளதாக ஹட்டன் காவல்துறை தெரிவித்துள்ளது. தங்கப் பொருட்கள் தயாரிக்கும் 3…

116 0 0
இலங்கை செய்திகள்

மல்வத்தை கோர விபத்து: தீவிர சிகிச்சை பெற்று வந்த மற்றைய இளைஞரும் உயி@ரிழப்பு!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (20) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி ஆகியன மோதிய கோர விபத்தில்…

128 0 0
இலங்கை செய்திகள்

நிந்தவூர் கடல் அனர்த்தம்: காணாமல் போன மற்றைய மாணவரின் சட@லமும் பொத்துவில் கோமாரி கடற்பரப்பில் மீட்பு 

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் கடற்கரையில் கடந்த வெள்ளிக்கிழமை (20) கடலில் நீராடச் சென்று அலையில் இழுத்துச் செல்லப்பட்டுக் காணாமல் போயிருந்த மற்றைய மாணவரின் சடலமும் நள்ளிரவு பொத்துவில்…

141 0 0