உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பருத்தித்துறையில் டெங்கு ஒழிப்பு : 284 இடங்களில் அதிரடிச் சோதனை!

இலங்கை செய்திகள் 6 மணி நேரம் முன்
139 பார்வைகள்

பருவமழை நெருங்கி வரும் நிலையில், டெங்கு நுளம்புப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் சமூக மட்டத்திலான டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் பருத்தித்துறையில் நேற்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, நுளம்புக் குடம்பிகள் காணப்படும் வகையில் சூழலைப் பேணிய 15 குடியிருப்பாளர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை நகர சபையின் ஆளுகைக்குட்பட்ட தும்பளை கிழக்குக் கிராம சேவையாளர் பிரிவில், பருத்தித்துறை நகர சபையின் ஏற்பாட்டில் இந்தச் சமூக மட்டத்திலான டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நேற்று நடைபெற்றது.

இந்தச் செயற்றிட்டத்தில் பருத்தித்துறை பிரதேச செயலகம், பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் இலங்கை இராணுவத்தினர் ஆகியோர் இணைந்து பங்குபற்றினர்.

இந்தக் கிராம சேவையாளர் பிரிவிலுள்ள வீடுகள், வியாபார நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விரிவான களப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

மொத்தமாக 284 இடங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில், 118 இடங்கள் நுளம்புகள் பெருகக்கூடிய அபாயகரமான சூழல்களாக அடையாளம் காணப்பட்டன.

மேலும், 16 இடங்களுக்குச் சிவப்பு அறிவித்தல்கள் வழங்கப்பட்டதுடன், நுளம்புக் குடம்பிகள் காணப்படும் வகையில் சுற்றாடலைப் பராமரித்த 15 குடியிருப்பாளர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தியே தனித்த கட்சி உருவாகக் காரணம் – காதர் மஸ்தான்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தி உள்ளிட்ட பல்வேறு காரணங்களே தனித்த அரசியல் கட்சியை உருவாக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர்…

124 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டன் நகரில் தொடர் கொள்ளை!

இன்று காலை (22) ஹட்டன் நகரில் உள்ள பின் சாலையில் அமைந்துள்ள 4 கடைகளில் திருடன் புகுந்துள்ளதாக ஹட்டன் காவல்துறை தெரிவித்துள்ளது. தங்கப் பொருட்கள் தயாரிக்கும் 3…

116 0 0
இலங்கை செய்திகள்

மல்வத்தை கோர விபத்து: தீவிர சிகிச்சை பெற்று வந்த மற்றைய இளைஞரும் உயி@ரிழப்பு!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (20) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி ஆகியன மோதிய கோர விபத்தில்…

128 0 0
இலங்கை செய்திகள்

நிந்தவூர் கடல் அனர்த்தம்: காணாமல் போன மற்றைய மாணவரின் சட@லமும் பொத்துவில் கோமாரி கடற்பரப்பில் மீட்பு 

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் கடற்கரையில் கடந்த வெள்ளிக்கிழமை (20) கடலில் நீராடச் சென்று அலையில் இழுத்துச் செல்லப்பட்டுக் காணாமல் போயிருந்த மற்றைய மாணவரின் சடலமும் நள்ளிரவு பொத்துவில்…

141 0 0