உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பலாலி வீதிப் போக்குவரத்து நேரம் நீடிப்பு!

இலங்கை செய்திகள் 7 மணி நேரம் முன்
143 பார்வைகள்

யாழ்ப்பாணம், வசாவிளான் சந்தியிலிருந்து பருத்தித்துறை – பொன்னாலை வீதி வரையான பலாலி வீதி இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் நள்ளிரவு 12.00 மணி வரை பொதுமக்களின் போக்குவரத்துக்காகத் திறக்கப்பட்டிருக்கும் என்று படைத்தரப்பு அறிவித்துள்ளது.

படையினரின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான பலாலி வீதியில், வசாவிளான் காவல் நிலையத்திலிருந்து பலாலிச் சந்தி வரையில் தினமும் காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரைக்குமே பொதுமக்கள் பயணிக்க இதுவரை அனுமதிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், இந்த வீதியானது இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் நள்ளிரவு 12.00 மணி வரை பொதுமக்கள் பயணிக்க அனுமதிக்கப்படுகின்றது என்று படைத்தரப்பினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

வலிகாமம் வடக்குப் பகுதியில் தமது பூர்வீக நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என மக்கள் தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், வீதிகள் மாத்திரம் இவ்வாறு பொதுமக்களின் போக்குவரத்துக்காக அனுமதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தியே தனித்த கட்சி உருவாகக் காரணம் – காதர் மஸ்தான்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தி உள்ளிட்ட பல்வேறு காரணங்களே தனித்த அரசியல் கட்சியை உருவாக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர்…

125 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டன் நகரில் தொடர் கொள்ளை!

இன்று காலை (22) ஹட்டன் நகரில் உள்ள பின் சாலையில் அமைந்துள்ள 4 கடைகளில் திருடன் புகுந்துள்ளதாக ஹட்டன் காவல்துறை தெரிவித்துள்ளது. தங்கப் பொருட்கள் தயாரிக்கும் 3…

117 0 0
இலங்கை செய்திகள்

மல்வத்தை கோர விபத்து: தீவிர சிகிச்சை பெற்று வந்த மற்றைய இளைஞரும் உயி@ரிழப்பு!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (20) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி ஆகியன மோதிய கோர விபத்தில்…

128 0 0
இலங்கை செய்திகள்

நிந்தவூர் கடல் அனர்த்தம்: காணாமல் போன மற்றைய மாணவரின் சட@லமும் பொத்துவில் கோமாரி கடற்பரப்பில் மீட்பு 

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் கடற்கரையில் கடந்த வெள்ளிக்கிழமை (20) கடலில் நீராடச் சென்று அலையில் இழுத்துச் செல்லப்பட்டுக் காணாமல் போயிருந்த மற்றைய மாணவரின் சடலமும் நள்ளிரவு பொத்துவில்…

141 0 0