உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மாடு மேய்க்கச் சென்றவருக்கு நேர்ந்த துயரம்.!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
126 பார்வைகள்

வவுனியா, நெடுங்கேணி – பெரியமடுப் பகுதியில் இடம்பெற்ற காட்டு யானைத் தாக்குதலில் படுகாயமடைந்த நபர் ஒருவர் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் நெடுங்கேணிப் பகுதியைச் சேர்ந்த சி.கரன் (வயது 45) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேற்படி நபர் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை வழக்கம் போல் ஏனைய பண்ணையாளர்களுடன் இணைந்து அந்தப் பகுதியில் மாடு மேய்க்கச் சென்றபோதே, எதிர்பாராதவிதமாக உலா வந்த ஒற்றை யானையின் தாக்குதலுக்கு இலக்காகிப் படுகாயமடைந்துள்ளார்.

இதனையடுத்து, அவருடன் சென்ற ஏனையவர்களால் அவர் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தபோதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பெரியமடு மற்றும் அதனைச் சூழ்ந்துள்ள கிராமப் பகுதிகளில் தொடர்ச்சியாக உலா வரும் குறிப்பிட்ட ஒரு ஒற்றை யானையினாலேயே இவ்வாறான கொடூர மனித உயிரிழப்புகள் தொடர்கின்றன என்று பிரதேச மக்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

கிராமப்புற மக்களின் வாழ்வாதார நடவடிக்கைகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள இந்தக் காட்டு யானையைக் கட்டுப்படுத்தவும், கிராம மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் வனஜீவராசிகள் திணைக்களமும் உரிய அதிகாரிகளும் உடனடியாகத் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தியே தனித்த கட்சி உருவாகக் காரணம் – காதர் மஸ்தான்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தி உள்ளிட்ட பல்வேறு காரணங்களே தனித்த அரசியல் கட்சியை உருவாக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர்…

125 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டன் நகரில் தொடர் கொள்ளை!

இன்று காலை (22) ஹட்டன் நகரில் உள்ள பின் சாலையில் அமைந்துள்ள 4 கடைகளில் திருடன் புகுந்துள்ளதாக ஹட்டன் காவல்துறை தெரிவித்துள்ளது. தங்கப் பொருட்கள் தயாரிக்கும் 3…

117 0 0
இலங்கை செய்திகள்

மல்வத்தை கோர விபத்து: தீவிர சிகிச்சை பெற்று வந்த மற்றைய இளைஞரும் உயி@ரிழப்பு!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (20) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி ஆகியன மோதிய கோர விபத்தில்…

128 0 0
இலங்கை செய்திகள்

நிந்தவூர் கடல் அனர்த்தம்: காணாமல் போன மற்றைய மாணவரின் சட@லமும் பொத்துவில் கோமாரி கடற்பரப்பில் மீட்பு 

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் கடற்கரையில் கடந்த வெள்ளிக்கிழமை (20) கடலில் நீராடச் சென்று அலையில் இழுத்துச் செல்லப்பட்டுக் காணாமல் போயிருந்த மற்றைய மாணவரின் சடலமும் நள்ளிரவு பொத்துவில்…

141 0 0