உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

அரசியலில் அறிக்கைகள் வெளியிடுவது மிகவும் அவசியம்.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
125 பார்வைகள்

அரசியல் களத்தில் அறிக்கைகள் வெளியிடுவதன் அவசியத்தை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் புரிந்து கொண்டு, தற்போது அறிக்கைகளை வெளியிட ஆரம்பித்திருப்பதை வரவேற்பதாக இலங்கை உலமா கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

அறிக்கைகளின் அரசியல் முக்கியத்துவம்:
“தற்போது ஹரீஸ் அவர்கள் நம்மைப் போன்று அறிக்கைகளை வெளியிட ஆரம்பித்துள்ளார். அரசியலைப் பொறுத்தவரை அறிக்கை எவ்வளவு அவசியம் என்பதை அவர் புரிந்து கொண்டது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். அறிக்கை விடத் தெரியாதவன் ஒருபோதும் அரசியல்வாதியாக இருக்கத் தகுதியற்றவன்.”

தலைவர் அஷ்ரஃபின் வழிகாட்டல்: “என்னை ‘அறிக்கை மன்னன்’ எனக் கேலி செய்தவர்களும் உண்டு. ஆனால், மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்கள் அமைச்சராகப் பொறுப்பேற்பதற்கு முன்னதாக அவர்தான் உண்மையான அறிக்கை மன்னராகத் திகழ்ந்தார் என்பதை நான் அப்போது சுட்டிக்காட்டினேன். எவ்வாறு அரசியல் அறிக்கை வெளியிட வேண்டும் என்பதை நான் தலைவர் அஷ்ரஃபின் அறிக்கைகளைப் படித்துப் பார்த்தே கற்றுக்கொண்டேன்” என்றும் அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தியே தனித்த கட்சி உருவாகக் காரணம் – காதர் மஸ்தான்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தி உள்ளிட்ட பல்வேறு காரணங்களே தனித்த அரசியல் கட்சியை உருவாக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர்…

122 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டன் நகரில் தொடர் கொள்ளை!

இன்று காலை (22) ஹட்டன் நகரில் உள்ள பின் சாலையில் அமைந்துள்ள 4 கடைகளில் திருடன் புகுந்துள்ளதாக ஹட்டன் காவல்துறை தெரிவித்துள்ளது. தங்கப் பொருட்கள் தயாரிக்கும் 3…

114 0 0
இலங்கை செய்திகள்

மல்வத்தை கோர விபத்து: தீவிர சிகிச்சை பெற்று வந்த மற்றைய இளைஞரும் உயி@ரிழப்பு!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (20) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி ஆகியன மோதிய கோர விபத்தில்…

127 0 0
இலங்கை செய்திகள்

நிந்தவூர் கடல் அனர்த்தம்: காணாமல் போன மற்றைய மாணவரின் சட@லமும் பொத்துவில் கோமாரி கடற்பரப்பில் மீட்பு 

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் கடற்கரையில் கடந்த வெள்ளிக்கிழமை (20) கடலில் நீராடச் சென்று அலையில் இழுத்துச் செல்லப்பட்டுக் காணாமல் போயிருந்த மற்றைய மாணவரின் சடலமும் நள்ளிரவு பொத்துவில்…

140 0 0