உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
28 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

இளைஞர்களின் கருத்துக்களை நாடாளுமன்ற குழுக்களில் முன்வைக்க நடவடிக்கை.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
79 பார்வைகள்

இளைஞர்களால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள், பிரச்சினைகள் மற்றும் கொள்கை முன்மொழிவுகளை நாடாளுமன்ற குழுக்களில் முன்வைப்பதுடன், இந்தச் செயற்பாட்டில் இளைஞர் பிரதிநிதிகளின் பங்கேற்பை உறுதிப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

நாடாளுமன்றத்தின் திறந்த ஆட்சிமுறை முன்முயற்சிக்கான நாடாளுமன்றக் குழுவின் (Parliamentary Caucus for the Open Parliament Initiative) ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட “குரலிலிருந்து கொள்கைக்கு” (Voice to Policy) பயிற்சிப் பட்டறைகளில் இளைஞர்களால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளை நாடாளுமன்ற குழுக்களிடம் கொண்டு செல்வது தொடர்பிலேயே இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

அண்மையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடல், குறித்த நாடாளுமன்றக் குழுவின் இணைத் தலைவர்களான அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன மற்றும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசபுத்திரன் இராசமாணிக்கம் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

திறந்த நாடாளுமன்றக் கொள்கையை ஊக்குவிப்பதுடன், நாடாளுமன்ற விவகாரங்களில் இளைஞர்களின் பங்கேற்பை அதிகரிக்கும் நோக்கில் இந்தப் பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்பட்டன. கம்பஹா, மட்டக்களப்பு மற்றும் கண்டி மாவட்டங்களில் இப்பட்டறைகள் இடம்பெற்றிருந்தன.

இதன்போது, குறித்த மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர் பிரதிநிதிகள், பயிற்சிப் பட்டறைகளின்போது இளைஞர்களால் முன்வைக்கப்பட்ட பொதுவான பிரச்சினைகள், கருத்துக்கள் மற்றும் கொள்கை முன்மொழிவுகளைச் சமர்ப்பித்தனர்.

இளைஞர்கள் அடையாளம் கண்டுள்ள பிரச்சினைகளையும் அவற்றுக்கான தீர்வுப் பரிந்துரைகளையும் எதிர்கால நாடாளுமன்ற செயற்பாடுகளில் பரிசீலனைக்கு உட்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

மேலும், இளைஞர் பிரதிநிதிகள் தங்களுக்கு ஆர்வமுள்ள துறைகளுடன் தொடர்புடைய நாடாளுமன்றத் துறைசார் மேற்பார்வைக் குழுக்களுடன் (Sectoral Oversight Committees) நேரடியாக ஈடுபட்டு, தமது கருத்துக்கள் மற்றும் கொள்கை முன்மொழிவுகளை முன்வைப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவது குறித்தும்
கவனம் செலுத்தப்பட்டது.

இளைஞர்களின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளை நாடாளுமன்ற செயற்பாடுகளுடன் இணைப்பதன் மூலம், ஜனநாயகச் செயற்பாடுகளில் பொதுமக்களின் பங்கேற்பை மேலும் வலுப்படுத்துவதே இந்த முயற்சியின் பிரதான நோக்கமாகும்.

இக்கலந்துரையாடலில் நாடாளுமன்ற குழுவின் உறுப்பினர்களுடன், “Voice to Policy” பயிற்சிப் பட்டறைத் தொடருக்கு ஆதரவளிக்கும் உள்ளடக்கிய தாக்கத்திற்கான கூட்டணி (CII – Coalition for Inclusive Impact) மற்றும் தேசிய ஜனநாயக நிறுவனம் (NDI – National Democratic Institute) ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோர விபத்தில் ஒருவர் உ**யிரிழப்பு.!

மொனராகலை – வெதிகும்புர வீதியில் இன்று (28) காலை பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்தும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. மொனராகலையிலிருந்து வெதிகும்புர நோக்கிப் பயணித்த…

69 0 0
இலங்கை செய்திகள்

அஸ்வெசும பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கி வைப்பு.!

2026 ஆம் ஆண்டுக்கான சமுர்த்தி தேசிய வலுவூட்டல் வேலைத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட அஸ்வெசும பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் (27)…

65 0 0
இலங்கை செய்திகள்

உள்ளூராட்சி சபைகளில் தமிழரசு – சங்கு ஒரே கட்சியாக இயங்க தீர்மானம்.!

இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி ஆகிய இரு தரப்புகளும் உள்ளூராட்சி சபைகளின் நிதி ஒதுக்கீடுகள் மற்றும் அபிவிருத்திப் பணிகளில் ஒரே கட்சியைப்…

75 0 0
இலங்கை செய்திகள்

வீடுகள் கட்டித் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி; இருவர் கைது.!

வீடுகள் கட்டித் தருவதாகக் கூறி 3 கோடியே 87 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் நிதியை மோசடி செய்ததாகக் கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களான ஆண் ஒருவரும்…

91 0 0