உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
28 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

விமானி ஸ்மித் மச்சாருக்கு ஐக்கிய அரபு இராச்சியத்தின் உயரிய விருது!

உலக செய்திகள் 2 மணி நேரம் முன்
81 பார்வைகள்

கடந்த செப்டம்பர் 30 ஆம் திகதி ஃப்ளைதுபாய் (flydubai) விமானத்தின் விமானிகள் அறை (Cockpit) பகுதியில் ஏற்பட்ட ஆபத்தான சூழ்நிலையின்போது, படுகாயமடைந்த நிலையிலும் சாதுரியமாகச் செயற்பட்டுப் பெரும் அசம்பாவிதத்தைத் தடுத்த இந்திய விமானி கெப்டன் ஸ்மித் மச்சார் (Smit Machchhar) மற்றும் விமானப் பணியாளர்களுக்கு ஐக்கிய அரபு இராச்சியம் உயரிய விருது வழங்கி கௌரவித்துள்ளது.

விமானி ஸ்மித் மச்சார் தீவிர காயமடைந்த நிலையிலும், விமானிகள் அறையின் கதவைத் திறந்து பணியாளர்கள் மற்றும் பயணிகள் உள்ளே நுழைந்து நிலைமையைக் கட்டுப்படுத்த வழிவகுத்தார். இதன் மூலம் நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டன.

இவர்களின் இந்த வீரத்தை பாராட்டும் வகையில், ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ‘ஸாயித் II முதலாம் வகுப்பு’ (First Class Order of Zayed II) கௌரவத்தை அறிவித்தார்.

இந்த விருதுகளை துபாயின் முடிக்குரிய இளவரசரும், துணைப் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் குறித்த பணியாளர்களுக்கு வழங்கினார்.

முன்னதாக, நேற்று ஐக்கிய அரபு இராச்சிய ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் மற்றும் பிரதமரும், துபாயின் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் ஆகியோர் இந்த விமானப் பணியாளர்களை நேரில் சந்தித்துப் பாராட்டினர்.

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இக்குழுவினர் காட்டிய தொழில்முறை அர்ப்பணிப்பையும் தைரியத்தையும் தலைவர்கள் வெகுவாகப் பாராட்டினர்.

முன்னதாக இந்திய விமானி ஸ்மித் மச்சாரின் இந்தச் வீரச் செயலுக்கு இந்தியா, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்கள் தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்.

மேலும், காயங்களிருந்து மீண்டு வந்ததும் அவருக்குப் ‘லைவ் குடிமகன் வீர விருது’ (Civilian Bravery Award) வழங்கப்படும் என இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது.

முன்னதாக 3 ஆம் திகதி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஸ்மித் மச்சாரை நேரில் சென்று சந்தித்த துபாய் முடிக்குரிய இளவரசர் ஷேக் ஹம்தான், மனித உயிர்களைக் காப்பதில் அவர் காட்டிய இணையற்ற பொறுப்புணர்வையும் தைரியத்தையும் பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

மீண்டும் டொரன்டோ நகர முதல்வரானார் ஒலிவியா சௌ

கனடாவின் டொரண்டோ நகரின் முதல்வருக்கான தேர்தலில் கடும் போட்டி நிலவி வந்த நிலையில், ஒலிவியா சௌ தனது முதன்மைப் போட்டியாளரான நகர சபை உறுப்பினர் பிராட் பிராட்போர்டை…

83 0 0
உலக செய்திகள்

இஸ்ரேல் பொதுத் தேர்தல்: வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பம்!

இஸ்ரேலில் நடைபெற்ற பொதுத் தேர்தலின் வாக்குப் பதிவுக்குப் பின்னர் வெளியான கருத்துக் கணிப்புகள், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கட்சிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் காடி ஐசன்கோட்டின் கட்சிக்கும் இடையே…

82 0 0
உலக செய்திகள்

ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் ரஷ்யாவுக்கு விஜயம்!

எரிவாயு ஏற்றுமதி நாடுகளின் அமைப்பின் (GECF) எட்டாவது உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் ரஷ்யாவைச் சென்றடைந்துள்ளதாக ஈரானின் அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஒருநாள் உத்தியோகபூர்வ…

101 0 0
உலக செய்திகள்

இஸ்ரேல் தேர்தலில் தான் வெற்றி பெற்றால் மீண்டும் ஈரானுக்கு எதிரான போர்!

இஸ்ரேலில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தான் மீண்டும் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஈரானுக்கு எதிரான போரை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் இணைந்து மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளதாக இஸ்ரேல்…

111 0 0