உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
28 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

த.வி.பு. மீதான தடையை கனடா உடனே நீக்கி ஏனைய நாடுகளுக்கும் வழிகாட்ட வேண்டும்.!

இலங்கை செய்திகள் 3 மணி நேரம் முன்
80 பார்வைகள்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது கனடா விதித்துள்ள தடையை நீக்குவதற்கான நடவடிக்கைகளை அந்நாடு முதலில் முன்னெடுத்து, ஏனைய உலக நாடுகளும் தமது தடைகளை நீக்குவதற்கு முன்னுதாரணமாகவும் வழிகாட்டியாகவும் செயற்பட வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் நேற்று செவ்வாய்க்கிழமை அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகப் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற விசேட சந்திப்பின்போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

இந்தச் சந்திப்பில் கன்சர்வேட்டிவ் கட்சியின் இலங்கைத் தமிழர் விவகாரங்களுக்குப் பொறுப்பானவரும், சர்வதேச மனித உரிமைகள் தொடர்பான நாடாளுமன்ற உப குழுவின் உப தலைவருமான சுவலோய் மஜும்தார், நாடாளுமன்ற உறுப்பினர் கொஸ்டாஸ் மெனெகாகிஸ், எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலக வெளித்தொடர்புப் பிரிவைச் சேர்ந்த டரினா ஒஸ்ட்ரோவ்ஸ்கா ஆகியோர் கலந்துகொண்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுடன் கனடாவைச் சேர்ந்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் திரு. அமலிதனும் அவரது குழுவினரும் பங்கேற்றிருந்தனர்.

இலங்கையில் ஆயுதப் போர் முடிவடைந்து 17 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையைத் தொடர்ந்து பேணுவதற்கான அவசியத்தை கனடா மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இதன்போது சிறீதரன் எம்.பி. சுட்டிக்காட்டினார்.

கனடா இந்த விடயத்தில் முதற்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துத் தடையை நீக்குவதுடன், ஏனைய நாடுகளும் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வழியை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்தக் கோரிக்கை தொடர்பில் கருத்துத் தெரிவித்த கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குவது குறித்து தமது கட்சித் தலைமையுடன் ஆலோசித்து சாதகமான முடிவை எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.

இந்தச் சந்திப்பில் இரண்டாவது முக்கிய விடயமாக, யாழ்ப்பாணம் – செம்மணியில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான விசாரணைகளுக்குச் சர்வதேச தரத்திலான தடயவியல் தொழில்நுட்ப உதவிகளையும் நவீன ஆய்வு உபகரணங்களையும் பெற்றுக்கொடுப்பது குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகள் நம்பகத்தன்மையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் முன்னெடுக்கப்படுவதற்குச் சர்வதேச நிபுணர்களின் நேரடிப் பங்களிப்பு, மனித எச்சங்களை விஞ்ஞான ரீதியாகப் பரிசோதிப்பதற்கான நவீன தடயவியல் கருவிகள் ஆகியன அவசியமானவை என்று சுட்டிக்காட்டப்பட்டதுடன், இதற்காகக் கனடா உரிய தொழில்நுட்ப உதவிகளையும் சர்வதேசத் தடயவியல் நிபுணத்துவத்தையும் பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோர விபத்தில் ஒருவர் உ**யிரிழப்பு.!

மொனராகலை – வெதிகும்புர வீதியில் இன்று (28) காலை பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்தும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. மொனராகலையிலிருந்து வெதிகும்புர நோக்கிப் பயணித்த…

69 0 0
இலங்கை செய்திகள்

அஸ்வெசும பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கி வைப்பு.!

2026 ஆம் ஆண்டுக்கான சமுர்த்தி தேசிய வலுவூட்டல் வேலைத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட அஸ்வெசும பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் (27)…

65 0 0
இலங்கை செய்திகள்

உள்ளூராட்சி சபைகளில் தமிழரசு – சங்கு ஒரே கட்சியாக இயங்க தீர்மானம்.!

இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி ஆகிய இரு தரப்புகளும் உள்ளூராட்சி சபைகளின் நிதி ஒதுக்கீடுகள் மற்றும் அபிவிருத்திப் பணிகளில் ஒரே கட்சியைப்…

75 0 0
இலங்கை செய்திகள்

வீடுகள் கட்டித் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி; இருவர் கைது.!

வீடுகள் கட்டித் தருவதாகக் கூறி 3 கோடியே 87 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் நிதியை மோசடி செய்ததாகக் கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களான ஆண் ஒருவரும்…

91 0 0