உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
28 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சட்டத்துக்கு அப்பாற்பட்டு இயங்க பொலிஸாருக்கு அதிகாரம் இல்லை.!

இலங்கை செய்திகள் 4 மணி நேரம் முன்
78 பார்வைகள்

பொலிஸ் பாதுகாப்பில் இருக்கும் சந்தேகநபர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய முழுப் பொறுப்பும் பொலிஸாருக்கு உண்டு என்றும், சட்டத்துக்கு அப்பாற்பட்ட வகையில் பொலிஸார் செயற்பட முடியாது என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

சட்டத்துக்கு முரணாகப் பொலிஸார் செயற்பட்டால் அவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,
“ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் பாதுகாப்பில் இருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தச் சம்பவத்தில் பொலிஸார் சட்டத்துக்கு முரணாகச் செயற்பட்டிருக்கின்றமை விசாரணைகளில் உறுதிசெய்யப்பட்டால், அவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.

சட்டத்துக்கு முரணாகச் செயற்படும் அதிகாரம் பொலிஸாருக்கு எப்போதுமே கிடையாது.” – என்றார்.

பொலிஸ் திணைக்களத்தின் ஒழுக்காற்று நடவடிக்கைகள் குறித்துத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமைச்சர்,

“கடந்த இரண்டு ஆண்டுகாலப் பகுதியில் சட்டவிரோதமான முறையிலும் ஒழுக்கீனமாகவும் செயற்பட்ட 720 இற்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்கள்.

பொலிஸார் சட்டவிரோதமான முறையில் செயற்பட்டாலோ அல்லது அநீதி இழைத்தாலோ, பொதுமக்கள் அது குறித்து நேரடியாகப் பொலிஸ்மா அதிபரிடமோ அல்லது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சிடமோ முறையிட முடியும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோர விபத்தில் ஒருவர் உ**யிரிழப்பு.!

மொனராகலை – வெதிகும்புர வீதியில் இன்று (28) காலை பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்தும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. மொனராகலையிலிருந்து வெதிகும்புர நோக்கிப் பயணித்த…

69 0 0
இலங்கை செய்திகள்

அஸ்வெசும பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கி வைப்பு.!

2026 ஆம் ஆண்டுக்கான சமுர்த்தி தேசிய வலுவூட்டல் வேலைத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட அஸ்வெசும பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் (27)…

65 0 0
இலங்கை செய்திகள்

உள்ளூராட்சி சபைகளில் தமிழரசு – சங்கு ஒரே கட்சியாக இயங்க தீர்மானம்.!

இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி ஆகிய இரு தரப்புகளும் உள்ளூராட்சி சபைகளின் நிதி ஒதுக்கீடுகள் மற்றும் அபிவிருத்திப் பணிகளில் ஒரே கட்சியைப்…

75 0 0
இலங்கை செய்திகள்

வீடுகள் கட்டித் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி; இருவர் கைது.!

வீடுகள் கட்டித் தருவதாகக் கூறி 3 கோடியே 87 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் நிதியை மோசடி செய்ததாகக் கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களான ஆண் ஒருவரும்…

91 0 0