உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
22 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

வளிமண்டலவியல் திணைக்களத்தின் விசேட அறிக்கை: மீனவர்களை அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
77 பார்வைகள்

இலங்கைக்கு அருகில் காணப்படும் தாழமுக்க மண்டலம் தற்போது நாட்டின் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக வானிலை அவதானிப்பு மையத்தின் கணிப்பீட்டு பிரிவின் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக இன்றைய நாளிலும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடுமையான மேகமூட்டத்துடன் கூடிய மழை நிலவுவதுடன், குறிப்பாக மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு, தெற்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

குறிப்பாக மாலையிலோ அல்லது இரவிலோ நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை தொடரும் சாத்தியம் உள்ளதோடு, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றரைத் தாண்டிய கனமழை பதிவாகலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இத்தகைய வானிலை மாற்றங்கள் காரணமாக பொதுமக்கள் அனைவரும் இது குறித்து விசேட கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இந்த வளிமண்டலவியல் முறைமையின் தாக்கம் இன்றைய நாள் முழுவதும் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதோடு, நாளைய நாள் தொடக்கத்திலும் இந்த நிலை தொடரக்கூடும் என மெரில் மெண்டிஸ் மேலும் தெரிவித்தார்.

கடற்பிரதேசங்களைப் பொறுத்தவரை, குறிப்பாக மேற்கு, தெற்கு மற்றும் வடக்கு கடல் பகுதிகளிலும் இடைக்கிடையே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்பதால், மீனவர்களும் கடற்படை சமூகத்தினரும் இது குறித்து மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என மீண்டும் நினைவூட்டப்படுகின்றது.

மேலும், இந்நாட்களில் இலங்கையை அண்மித்த பகுதிகளில் அயனஅயல் இணைப்பு வலயம் (Intertropical Convergence Zone) தீவிரமடைந்துள்ளதால், எதிர்கால வானிலை அறிவிப்புகள் தொடர்பில் பொதுமக்கள் அனைவரும் விசேட கவனத்தை செலுத்த வேண்டுமென வானிலை அவதானிப்பு மையத்தின் கணிப்பீட்டு பிரிவின் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சைவமக்களின் சமய மரியாதைக்கு ஏற்பட்ட அவமதிப்புக்களை பட்டியலிட்டார் ரவிகரன் எம்.பி!

இந்த நாட்டில் சைவமக்களின் சமய மரியாதைக்கு ஏற்பட்ட அவமதிப்புகளைப் பட்டியலிட்டுக்காட்டிய வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இறுதிப்போரின்போது காணாமல் ஆக்கப்பட்ட அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப்…

63 0 0
இலங்கை செய்திகள்

இனந்தெரியாத நபர்களால் மூன்று ஏக்கர் நெற்செய்கை அழிப்பு.!

அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கண்ணகிபுரம், ஆணைப்பாம்வெளி பகுதியில் விவசாயி ஒருவரின் சுமார் மூன்று ஏக்கர் நெற்செய்கைக்கு இரசாயனக் கலவை தெளிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு…

65 0 0
இலங்கை செய்திகள்

மண்டைதீவு வடக்கின் இரவுகள் நிகழ்வுக்கு அனுமதி இல்லை.!

மண்டைதீவு எக்கோரூறிச வளாகத்தில் வரும் தீபாவளியை முன்னிட்டு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் வடக்கின் இரவுகள் நிகழ்ச்சியை நடத்த வேலணை பிரதேச சபை அனுமதி வழங்காது என…

66 0 0
இலங்கை செய்திகள்

தமிழ், முஸ்லிம், மலையகப் பிரதிநிதிகளுடன் சஜித் தீவிர கலந்தாய்வு.!

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித்…

75 0 0