உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

அதிகாலையில் பயங்கரம்; வீடொன்றில் உறங்கிக்கொண்டிருந்த தம்பதியினர் கொ**லை;

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
79 பார்வைகள்

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில், இன்று (24) அதிகாலை 2 மணியளவில் வீடொன்றில் உறங்கிக்கொண்டிருந்த தம்பதியினர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

வீடொன்றில் தந்தை, தாய் மற்றும் மகள் ஆகியோர் உறங்கிக்கொண்டிருந்த வேளையில், வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த இனந்தெரியாத நபர்கள் தந்தை மற்றும் தாயின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளனர்.

இதன்போது மகள் கூச்சலிட்டதையடுத்து, அயலவர்கள் ஓடிவந்து அவர்களை மீட்டு மாங்குளம் ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர். எனினும், இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இக்கொலைச் சம்பவத்தை யார், எதற்காகச் செய்தார்கள் என்பது தொடர்பில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த மாங்குளம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும், தடயவியல் பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து பல கோணங்களில் விசாரணைகளை முடக்கிவிட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்போது மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நீரில் மூழ்கி ஒருவர் உ**யிரிழப்பு.!

கித்துல்கல பகுதியில் அமைந்துள்ள மன்னகெத்தி எல்ல நீர்வீழ்ச்சியில் நேற்று (23) புதன்கிழமை மாலை நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கிய நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் காணாமல்…

79 0 0
இலங்கை செய்திகள்

தியாக தீபம் திலீபனின் நினைவு வாரத்தை முன்னிட்டு யாழ். பல்கலைக்கழகத்தில் குருதிக் கொடை நிகழ்வு.!

மண்ணின் விடுதலைக்காக ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு தனது உயிரைத் தியாகம் செய்த தியாகி திலீபனின் 39ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணப்…

76 0 0
இலங்கை செய்திகள்

அனோஜன் விவகாரத்தில் அரசியல்வாதிகள் நிதானமாக செயற்பட வேண்டும்.!

சவூதி அரேபியாவில் தண்டனை விவகாரத்தை எதிர்கொண்டு வரும் சிவராசா அனோஜன் விடயத்தில், இலங்கையின் அரசியல்வாதிகள் எதைப் பேசுவது, எதைப் பேசக்கூடாது என்பதில் தவறி வருவதாக உலமா கட்சியின்…

68 0 0
இலங்கை செய்திகள்

நுவரெலியா மாவட்டத்தில் கடும் காற்றுடன் கூடிய கனமழை.!

நேற்று நள்ளிரவு முதல் நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடும் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதேவேளை பல பகுதிகளில் அதிக அளவில் பனி மூட்டம்…

94 0 0