• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, June 25, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் மீள்கட்டுமானத்தை துரிதப்படுத்துமாறு பிரதமரிடம் ரவிகரன் எம்.பி கோரிக்கை!

selvan by selvan
June 25, 2026
in இலங்கை செய்திகள்.
0
Share on FacebookShare on Twitter



டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் மீள்கட்டுமானப் பணிகளை துரிதகதியில் முன்னெடுப்பதற்கு விசேட நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ளுமாறு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவிற்கு வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேவேளை டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் மீள்கட்டுமானப் பணிகள் மற்றும் நிதி இடைவெளிகள் தொடர்பில் முறையான துறைசார் ஆய்வு மேற்கொள்ளுமாறு  கல்வி, ஊழியப்படை மற்றும் மனித மூலதனம் பற்றிய பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக்குழுவின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே அங்கும்புரவிற்கு பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கடிதமொன்றினை அனுப்பிவைத்துள்ளதுடன், புயலால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் மீள்கட்டுமானப் பணிகள் மற்றும் விசேட நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான விடயத்தை அடுத்த கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் பாராளுமன்ற அமைச்சுசார் ஆலோசனைக்குழுக் கூட்ட நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்குமாறு, அக்குழுவின் தவிசாளருக்கும் பாராளுமன்று உறுப்பினரால் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் மீள்கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்துவதற்கான விசேட நிதி ஒதுக்கீடு கோரல் எனத் தலைப்பிட்டு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய அவர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

2024ஆம் ஆண்டு ஏற்பட்ட டித்வா புயலின் பேரழிவால் நாட்டின் ஏனைய பிராந்தியங்களைப் போலவே வடமாகாணத்தின் முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களிலுள்ள பெருமளவிலான அரச பாடசாலைகள் கடுமையான கட்டமைப்புச் சேதங்களுக்கு உள்ளாகியிருந்தன என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வர விரும்புகின்றேன்.

அனர்த்தம் ஏற்பட்டு நீண்டகாலம் கடந்துள்ள போதிலும், பாதிக்கப்பட்ட பல பாடசாலைகளின் வகுப்பறைக் கட்டடங்கள், கூரைகள், சுற்றுச்சுவர்கள், முறையான நீர் வழங்கல் மற்றும் சுகாதார வசதிகள் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்புகள் இன்னமும் முழுமையாக மீள் கட்டமைக்கப்படாமல் தொடர்ந்தும் முடங்கிய நிலையிலேயே காணப்படுகின்றன.

தற்போது சில பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட தற்காலிக பராமரிப்புப் பணிகள், ஆண்டுதோறும் வழங்கப்படும் சிறுதிருத்த நிதி உதவியின் ( MRC ) ஊடாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும் புயலால் ஏற்பட்ட சேதங்களின் பாரதூரதன்மையோடு ஒப்பிடுகையில் இத்தகைய வழக்கமான வருடாந்த நிதி ஒதுக்கீடுகள் எவ்வகையிலும் போதுமானதாக அமையவில்லை.

இந்நிலைமையானது மாணவர்களின் அன்றாட பாதுகாப்பு, ஆரோக்கியமான கற்றல் சூழல் மற்றும் கல்விச்சேவைகளின் தரம் ஆகியவற்றில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.

முல்லைத்தீவு கல்வி வலயத்தில் பாதிப்படைந்த 15 பாடசாலைகளுக்கு இன்னமும் பாதிப்பிலிருந்து மீண்டு வருவதற்கான நிதி உதவிகள் கிடைக்கப்பெறவில்லை.

வவுனியா தெற்கு வலயத்தில் வ/குருக்கள் புதுக்குளம் அ.த.க.பாடசாலை, வ/முஸ்லீம் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளும், மடு கல்வி வலயத்தில் மன்/கட்டையடம்பன் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையும், மன்னார் கல்வி வலயத்தில் இசைமலைத்தாழ்வு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை, மடுக்கரை அ.த.க.பாடசாலை, நொச்சிகுளம் அ.மு.க. பாடசாலை, ஜோசப் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளும் உடனடி தலையீட்டுடன் சீர் செய்யப்படவேண்டிய பாடசாலைகளாக காணப்படுகின்றன.

எனவே கல்விச் சமூக நலன்கருதி, இப்பிரச்சினையில் தங்களின் விசேட தலையீட்டை வழங்கி தித்வா புயலினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் தற்போதைய தேவை மற்றும் நிதி இடைவெளிகளை மீளாய்வு செய்யுமாறும் இதுவரை நிரந்தரமாக திருத்தப்படாத பாடசாலைகளின் விபரப் பட்டியலை பெற்று இயல்தகு விரைவில் குறித்த பாடசாலைகளின் உட்கட்டமைப்புகளை முழுமையாக சீரமைப்பதற்குரிய விசேட நிதி ஒதுக்கீட்டை ஏற்படுத்துமாறும் தங்களைத் தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

மேற்படி விடயம் தொடர்பில் தங்களின் சாதக பரிசீலிப்பையும் உடன் தலையீட்டையும் எதிர்பார்க்கின்றேன். எனக் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் மீள்கட்டுமானப் பணிகள் மற்றும் நிதி இடைவெளிகள் தொடர்பில் முறையான துறைசார் ஆய்வு மேற்கொள்ளுமாறு  கல்வி, ஊழியப்படை மற்றும் மனித மூலதனம் பற்றிய பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக்குழுவின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சியிடம் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அந்தவகையில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் மற்றும் உட்கட்டமைப்புகள் தொடர்பான மாவட்டவாரியான துல்லியமான தரவுகள், இப்பணிகளுக்காக இதுவரை ஒதுக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட நிதி விபரங்களின் வெளிப்படைத்தன்மை, இன்னமும் முழுமைப்படுத்தப்படாது நிலுவையில் உள்ள நீண்டகால கட்டுமானப் பணிகள், எதிர்காலத்தில் இவ்வாறான இயற்கை அனர்த்தங்களின் போது பாடசாலைகளைப் பாதுகாப்பதற்கான அனர்த்த மீட்பு நிதி ஏற்பாடுகள் உள்ளிட்ட அத்தியாவசிய விடயங்கள் தொடர்பில் முறையான ஆய்வை மேற்கொள்ளுமாறும் அதனூடாக தொடர்புடைய கொள்கைவழி, நிருவாகப் பரிந்துரைகளை அரசுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கல்வி, ஊழியப்படை மற்றும் மனித மூலதனம்பற்றிய பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக்குழுவின் தவிசாளருக்கு பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்தோடு டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் மீள்கட்டுமானப் பணிகள் மற்றும் விசேட நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான விடயத்தை அடுத்த கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் பாராளுமன்ற அமைச்சுசார் ஆலோசனைக்குழுக் கூட்ட நிகழ்ச்சிநிரலில் உள்ளடக்குமாறு, குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் தவிசாளரான பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கு பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

அக்கடிதத்தில் பகுதியளவான பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட தற்காலிக பராமரிப்புப் பணிகள், ஆண்டுதோறும் வழங்கப்படும் சாதாரண சிறுதிருத்த நிதியுதவியின் ஊடாகவே மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளதுடன், டித்வா புயலால் ஏற்பட்ட பேரழிவின் அளவோடு ஒப்பிடுகையில் இத்தகைய வழக்கமான ஒதுக்கீடுகள் எவ்வகையிலும் போதுமானதாக இல்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் தற்போதைய கள நிலவரம், மாவட்ட வாரியாக கணக்கிடப்பட்ட சேத விபரங்கள் மற்றும் உத்தியோகபூர்வ மதிப்பீடுகள், பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு இதுவரை விடுவிக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகள், இன்னமும் முழுமைப்படுத்தப்படாது நிலுவையில் உள்ள அத்தியாவசிய திருத்தப் பணிகள், டித்வா புயலின் பின்னரான பாடசாலைகளின் மீள்கட்டுமானத்துக்குரிய விசேட நிதி ஒதுக்கீட்டுக்கான தேவை உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து விரிவாக ஆராய்வதற்கும் உரிய தீர்வுகளை எட்டுவதற்கும் கல்வி அமைச்சு சார் ஆலோசனைக்குழுவின் அடுத்த கூட்ட நிகழ்ச்சி நிரலில் குறித்த விடயத்தை சேர்த்துக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அக்கடித்தின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

கிளிநொச்சியில் குடும்பஸ்தர் ஒருவர் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!

கிளிநொச்சியில் குடும்பஸ்தர் ஒருவர் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!

by selvan
June 25, 2026
0

கிளிநொச்சி, பச்சிளைப்பள்ளி வண்ணங்கேணி பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் ஐந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அமைதி வழியிலான சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். குறித்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடும்...

மாந்தை கிழக்கு பிரதேச சபையின் அமர்வு இன்றையதினம் இடம்பெற்றது!

by selvan
June 25, 2026
0

மாந்தை கிழக்கு பிரதேச சபையின் அமர்வானது இன்றையதினம் (25.06.2026) சபையின் தவிசாளர் செல்வி இராசையா நளினி தலைமையில் இடம்பெற்றது. இதன்போது உப தவிசாளர் சத்தியமூர்த்தி சத்தியவரதன் அவர்களால்...

மஸ்கெலியா நகரில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம்!

by selvan
June 25, 2026
0

தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்துடன் இணைந்து, மஸ்கெலியா பிரதேச சபையால் மஸ்கெலியா நகரில் சமீபத்தில் ஒரு டெங்கு ஒழிப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. மஸ்கெலியா நகரின் பிரதான வீதிகளில்...

ஜம்மு – காஷ்மீரின் உதம்பூரில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 22 பேர் உயிரிழப்பு!

ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் விபத்து!

by selvan
June 25, 2026
0

ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியின் குயில்வத்த பகுதியில் ஒரு மோட்டார் வாகனமும் முச்சக்கர வண்டியும் மோதிக்கொண்டதில் விபத்து ஏற்பட்டுள்ளது.இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த வட்டவளை பொலிஸ் நிலைய...

போதைப்பொருள் கடத்தலகாரர்களுக்கு  சிங்கப்பூர் பாணியிலான கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்!

போதைப்பொருள் கடத்தலகாரர்களுக்கு  சிங்கப்பூர் பாணியிலான கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்!

by selvan
June 25, 2026
0

இலங்கையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகச் சிங்கப்பூர் பாணியிலான கடுமையான தண்டனை முறைகளை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச...

சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் கிஷோரின் பதவி நீக்கத்திற்கு எதிராக போராட்டம்!

சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் கிஷோரின் பதவி நீக்கத்திற்கு எதிராக போராட்டம்!

by selvan
June 25, 2026
0

சாவகச்சேரி நகரசபையின் உப தவிசாளர் ஞானப்பிரகாசம் கிஷோரின் பதவி நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.நாளையதினம் வெள்ளிக்கிழமை இந்த போராட்டமானது முழு கடையடைப்பாக முன்னெடுக்கப்படவுள்ளது.பதவியில் இருந்து...

நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளர் மீது தாக்குதல்!

நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளர் மீது தாக்குதல்!

by selvan
June 25, 2026
0

நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளர் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு உள்ளார் என நோர்வூட் பொலிசார் தெரிவித்தனர்.தாக்குதலுக்கு உள்ளான நிலையில்...

உப தவிசாளர் கிசோரின் பதவி நீக்கத்துக்கு எதிர்ப்பு:  சாவகச்சேரியில் கதவடைப்பு போராட்டம்.!

உப தவிசாளர் கிசோரின் பதவி நீக்கத்துக்கு எதிர்ப்பு: சாவகச்சேரியில் கதவடைப்பு போராட்டம்.!

by Mathavi
June 25, 2026
0

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் ஞா. கிசோர் வடக்கு மாகாண ஆளுநரினால் பதவியிலிருந்து நீக்கப்பட்டமைக்குக் கடுமையான கண்டனத்தையும், எதிர்ப்பையும் தெரிவித்து நாளை வெள்ளிக்கிழமை சாவகச்சேரி நகரில்...

பசில் விரைவில் கைது; நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி மறைமுகமாகத் தெரிவிப்பு.!

பசில் விரைவில் கைது; நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி மறைமுகமாகத் தெரிவிப்பு.!

by Mathavi
June 25, 2026
0

இலங்கை நீதிமன்றங்களினால் பகிரங்கமாகச் சர்வதேச சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டு, தற்போது அமெரிக்காவில் பதுங்கியிருக்கும் ஒருவர் மிக விரைவில் சட்டபூர்வமாக நாட்டுக்கு அழைத்து வரப்பட்டு கைது செய்யப்படுவார் என்று...

குத்தகைக்கு வழங்கப்பட்ட கடைகளில் ஒப்பந்தத்தை மீறிய வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை.!

குத்தகைக்கு வழங்கப்பட்ட கடைகளில் ஒப்பந்தத்தை மீறிய வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை.!

by Mathavi
June 25, 2026
0

மன்னார் நகரசபையினால் வழங்கப்பட்ட கடைகளுக்கு முன் அல்லது நடைபாதையில் எந்தவிதமான வியாபாரங்களையும் செய்யக்கூடாது. மேலும் கடைகளில் எவ்வித மாற்றங்களும் செய்யக்கூடாது என்ற நிபந்தனைக்கு கடைகள் வழங்கப்பட்ட போதிலும்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி