உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

சுரேஷ் சலேவுக்குப் பலத்த பாதுகாப்பு – அதிரடிப் படையினர் குவிப்பு

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
19 பார்வைகள்

    அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரைச் சுற்றியுள்ள பாதுகாப்புப் பிரிவுகள் அதிரடியாகப் பலப்படுத்தப்பட்டுள்ளன.

    கொழும்பு தேசிய வைத்தியசாலை வளாகம் மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதான பொதுப் பகுதிகள் அனைத்திலும் பாதுகாப்புத் தரப்பினர் குவிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    சி.ஐ.டி. மற்றும் விசேட அதிரடிப்படையினர் களத்தில்
    வைத்தியசாலையின் விசேட பாதுகாப்புப் பணிகளுக்காகக் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளும், பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் பெருமளவில் களமிறக்கப்பட்டுள்ளனர்.

    வைத்தியசாலைக்கு உள்ளேயும் வெளியேயும் சந்தேகத்திற்கிடமான நடமாட்டங்கள் குறித்துப் பலத்த சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

    2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு, சி.ஐ.டியினரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த சுரேஷ் சலே, தனக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகச் சாகும் வரை உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.

    உணவு, நீர் மற்றும் மருந்துகளை உட்கொள்ள மறுத்ததால் அவரது உடல்நிலை மிக மோசமடைந்ததை அடுத்து, நேற்று இரவு அவர் அவசர அவசரமாகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அவருக்கு இழைக்கப்படும் மனிதாபிமானமற்ற நடத்தைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக இன்று காலை முதல் அரசியல் கட்சிகள் மற்றும் குடும்பத்தினரால் சத்தியாக்கிரகப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வரும் பின்னணியில், இந்த பாதுகாப்புப் பலப்படுத்தல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
    மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

    தொடர்புடைய செய்திகள் NEW

    இலங்கை செய்திகள்

    நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

    வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

    67 0 0
    இலங்கை செய்திகள்

    எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

    எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

    81 0 0
    இலங்கை செய்திகள்

    அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

    தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

    31 0 0
    இலங்கை செய்திகள்

    மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

    அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

    52 0 0