• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, June 8, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

இராணுவ வீரர்களின் முதுகெலும்பை உடைப்பதே டயஸ்போராக்களின் தேவை!

selvan by selvan
June 8, 2026
in இலங்கை செய்திகள்.
0
இராணுவ வீரர்களின் முதுகெலும்பை உடைப்பதே டயஸ்போராக்களின் தேவை!
Share on FacebookShare on Twitter

இலங்கை அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நீண்ட காலமாகச் சிறை வைக்கப்பட்டு அநீதியான முறையில் நடத்தப்பட்டு வருகின்றார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

பத்தரமுல்ல, நெலும் மாவத்தையிலுள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

இதன்போது மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் உருவப் படத்தைத் தனது பின்னணியில் காட்சிப்படுத்தியவாறு அவர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

“சுரேஷ் சலே என்பவர் தனது சொந்தத் திறமையினாலும், அர்ப்பணிப்பினாலும் இராணுவத்தில் ஜெனரல் பதவி வரை உயர்ந்த ஒரு தேசிய வீரன் ஆவார்.

அவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய ஒரு மூத்த இராணுவ அதிகாரி. தற்போதைய அரசியல்வாதிகளைப் போல மக்களுக்குப் பொய் கூறி, மக்களை ஏமாற்றிப் பதவிகளைப் பெற்றவர் அவர் அல்லர்.

மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் தலைமையின் கீழ், இந்நாட்டில் நிலவிய 30 ஆண்டுகால கொடூரமான பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வர சுரேஷ் சலே போன்ற அதிகாரிகள் அளப்பரிய பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

ஆனால், இன்று அவர் ஈவிரக்கமற்ற முறையில், அமானுஷ்யமாக நடத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் இதேபோன்று கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பிள்ளையான் (சிவநேசத்துரை சந்திரகாந்தன்) என்பவரும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர் எனக் கூறி கைது செய்யப்பட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஓராண்டு காலம் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுச் சிறை வைக்கப்பட்டிருந்தார்.

ஆனால் இறுதியில், கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் காணாமல்போன பழைய சம்பவம் ஒன்றைக் காட்டி அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டாரே தவிர, இன்று வரை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக அவர் மீது எந்தவொரு குற்றச்சாட்டோ அல்லது ஆதாரங்களோ முன்வைக்கப்படவில்லை.

தற்போது சுரேஷ் சலேவும் அதே போன்றதொரு அரசியல் பழிவாங்கலுக்கே உள்ளாக்கப்பட்டுள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் தவறானது எனக் கூறிக்கொண்டே தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்தது. இந்நாட்டில் நிலவிய எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காகவே கடந்த காலத்தில் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

அன்று இந்தச் சட்டத்துக்கு எதிராகக் கடுமையாகக் குரல் எழுப்பிய அநுரகுமார திஸாநாயக்க, இன்று தனது சொந்தக் கையொப்பத்தைப் பயன்படுத்தி, அதே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சுரேஷ் சலேயைத் தடுத்து வைப்பதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என்பது நல்லாட்சி அரசின் போது, தேசிய பாதுகாப்பு முழுமையாகச் சீர்குலைக்கப்பட்டிருந்த ஒரு பின்னணியிலேயே அரங்கேறியது.

அதுமட்டுமன்றி, உலகின் மிகப் பலத்த புலனாய்வு அமைப்பான அமெரிக்காவின் எப்.பி.ஐ. கூட இது ஒரு இஸ்லாமிய தீவிரவாதிகளின் செயல் என்பதைத் தனது விசாரணை அறிக்கையின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல் நடப்பதற்கு முன்னர், இவ்வாறானதொரு தாக்குதல் நாட்டில் நடக்கக்கூடும் என அப்போதைய நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் எச்சரித்த போது, அதற்கு எதிராகச் சஜித் பிரேமதாஸ தரப்பில் இருந்த தீவிரவாத ஆதரவுக் குழுக்களே கூச்சலிட்டன.

மேலும், இந்தச் சம்பவங்கள் நடைபெறும் காலப்பகுதியில் சுரேஷ் சலே இலங்கையிலேயே இருக்கவில்லை. அவர் தூதரகப் பணிகளுக்காகவும் பயிற்சிகளுக்காகவும் வெளிநாட்டிலேயே தங்கியிருந்தார்.

இலங்கை மண்ணிலேயே இல்லாத ஒரு அதிகாரியை, தற்போதைய ஜனாதிபதி தனது கையொப்பத்தைப் பயன்படுத்திச் சிறையில் அடைத்துச் சித்திரவதை செய்வதன் பின்னணியில் பாரிய சதி ஒளிந்துள்ளது.

தற்போதைய ஜே.வி.பி. அரசு ஆட்சிக்கு வருவதற்குப் புலம்பெயர் எல்.ரி.ரி.ஈ. டயஸ்போரா அமைப்புகளும், தீவிரவாதக் குழுக்களுமே ஆதரவு வழங்கின. அவர்களின் பிரதான நோக்கம் இந்நாட்டின் தேசிய பாதுகாப்பை முழுமையாகச் சீர்குலைப்பதாகும்.

எதிர்காலத்தில் இந்நாட்டில் மீண்டும் ஒரு பிரிவினைவாதப் போராட்டம் உருவானால், அதற்கு எதிராக நாட்டை நேசித்து களமிறங்கக்கூடிய இராணுவ வீரர்களின் முதுகெலும்பை உடைப்பதே இந்த டயஸ்போரா அமைப்புகளின் தேவையாக உள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இந்தப் புலம்பெயர் பிரிவினைவாதிகளின் தேவைகளையே தற்போது நிறைவேற்றி வருகின்றார்.

கடந்த கால பயங்கரவாதப் போரின் போது தலதா மாளிகை, ஸ்ரீ மகா போதி, காத்தான்குடி பள்ளிவாசல் மற்றும் அரந்தலாவ ஆகிய இடங்களில் பொதுமக்கள் மற்றும் பிக்குகள் கொடூரமாகக் கொல்லப்பட்டதை நாம் மறந்துவிடக் கூடாது.

அன்று சுரேஷ் சலே போன்ற வீரர்கள் போராடியே இந்த நாட்டுக்கு அமைதியைக் கொண்டு வந்தார்கள். ஆனால் இன்று நாட்டைப் பாதுகாத்த வீரர்களைச் சிறையில் அடைத்து, பிரிவினைவாதிகளின் தேவைகளை இந்த அரசு பூர்த்தி செய்கின்றது.” – என்றார்.

Related Posts

கடற்கரை கரப்பந்தாட்டத்தில் யாழ்ப்பாண வீராங்கனைகள் சாதனை!

கடற்கரை கரப்பந்தாட்டத்தில் யாழ்ப்பாண வீராங்கனைகள் சாதனை!

by selvan
June 8, 2026
0

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்படும் 36வது தேசிய விளையாட்டு நிகழ்வின் ஒரு அங்கமான கடற்கரை கரப்பந்து (Beach Volleyball) போட்டியானது அண்மையில் நீர்கொழும்பு பிரவுன் கடற்கரையில்...

நான்காவது நாளாகவும் தொடரும் சுகாதாரத் தொண்டர்களது போராட்டம்!

நான்காவது நாளாகவும் தொடரும் சுகாதாரத் தொண்டர்களது போராட்டம்!

by selvan
June 8, 2026
0

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சுகாதார தொண்டர்கள், தமக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என கோரி ஆரம்பித்த போராட்டமானது இன்று நான்காவது நாளாகவும் இடம்பெற்று வருகிறது....

அராலியில் இளம் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

அராலியில் இளம் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

by selvan
June 8, 2026
0

யாழ்ப்பாணம் அராலியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குடும்பஸ்தர் கடந்த சில மாதங்களாக உடல்...

நாகர்கோவில் காட்டில் போர்க்கால கையெறி குண்டு மீட்பு!

நாகர்கோவில் காட்டில் போர்க்கால கையெறி குண்டு மீட்பு!

by selvan
June 8, 2026
0

மருதங்கேணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகர்கோவில் கிழக்கு பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில், யுத்த காலத்தில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கையெறி குண்டு ஒன்று இன்று (08) கண்டெடுக்கப்பட்டுள்ளது. இன்று மாலை...

மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளராக ஜெளபருடன் புதிய நிருவாகம் தெரிவு

மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளராக ஜெளபருடன் புதிய நிருவாகம் தெரிவு

by selvan
June 8, 2026
0

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனைப் பிராந்திய புதிய மத்திய குழுவைத் தெரிவு செய்யும் நிகழ்வு நேற்று (07)ஆம் திகதி அட்டாளைச்சேனையிலுள்ள லொயிட்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வு...

வல்வெட்டித்துறையில் போராட்டக்காரர்களை அச்சுறுத்திய பொலிஸார்!

வல்வெட்டித்துறையில் போராட்டக்காரர்களை அச்சுறுத்திய பொலிஸார்!

by selvan
June 8, 2026
0

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைப் பாடகர் சங்கீத்ஷனை உடனடியாக விடுதலை செய்யக் கோரி, வல்வெட்டித்துறை பொலிஸாரின் கடுமையான மிரட்டல்களையும் கடந்து இன்று முற்பகல்...

சங்கீத்ஷனை ஜனாதிபதி பொது மன்னிப்பில் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்!

சங்கீத்ஷனை ஜனாதிபதி பொது மன்னிப்பில் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்!

by selvan
June 8, 2026
0

"பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சங்கீத்ஷனைப் பொதுமன்னிப்பின் அடிப்படையிலோ அல்லது கருணை அடிப்படையிலோ ஜனாதிபதி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்"...

சுரேஷ் சலேவுக்குப் பலத்த பாதுகாப்பு – அதிரடிப் படையினர் குவிப்பு

சுரேஷ் சலேவுக்குப் பலத்த பாதுகாப்பு – அதிரடிப் படையினர் குவிப்பு

by selvan
June 8, 2026
0

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரைச் சுற்றியுள்ள பாதுகாப்புப்...

டெங்கு அபாயம் தீவிரம் – கட்டுப்படுத்த விசேட செயற்றிட்டம் ஆரம்பம்!

டெங்கு அபாயம் தீவிரம் – கட்டுப்படுத்த விசேட செயற்றிட்டம் ஆரம்பம்!

by selvan
June 8, 2026
0

நாட்டின் 14 மாவட்டங்களில் டெங்கு பரவும் அபாயம் தீவிரமடைந்துள்ள நிலையில், அதனைக் கட்டுப்படுத்துவதற்கான 3 நாள்கள் விசேட டெங்கு ஒழிப்புச் செயற்றிட்டம் இன்று முதல் எதிர்வரும் 10ஆம்...

சுரேஷ் சலேவுக்கு நீதி கோரி கொழும்பில் சத்தியாக்கிரகம்!

சுரேஷ் சலேவுக்கு நீதி கோரி கொழும்பில் சத்தியாக்கிரகம்!

by selvan
June 8, 2026
0

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள இலங்கை அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு நீதி...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி