உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

நாடு முழுவதும் 25 மாவட்டங்களையும் உள்ளடக்கி“ஆயிரம் கிராமங்களுக்கு ஆயிரம் வேலைத் திட்டங்கள்” செயற்றிட்டம் ஆரம்பம்.

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
23 பார்வைகள்

தேசிய வறுமை ஒழிப்பு வேலைத் திட்டமான “பிரஜா சக்தி” திட்டத்துடன் இணைந்து நடைமுறைப்படுத்தப்படும் “ஆயிரம் கிராமங்களுக்கு ஆயிரம் வேலைத்திட்டங்கள்” திட்டத்தின் கீழ், நாட்டின் 25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் இன்று (02) ஆரம்பிக்கப்பட்டன.

அதன் ஒரு பகுதியாக ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைகள்” நிகழ்ச்சித்திட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பாளைக்குளி கிராமத்தில் பால் சேகரிப்பு நிலையத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு  இன்று  மாலை இடம்பெற்றது.

அதற்காக 10 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதுஇந்நிகழ்வில் பிரதம விருந்தினராக   பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன்  கலந்து கொண்டார். 

மேலும் குறித்த நிகழ்வில் பிரதேச செயலாளர், மாவட்டச் செயலக, பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள்   திணைக்களங்களின் தலைவர்கள், கிராம மட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இவ்வேலை திட்டங்களின்  ஊடாக கிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், தொழில் முயற்சிகளை ஊக்குவித்தல், பெண்கள் மற்றும் இளைஞர்களின் பொருளாதார பங்களிப்பை அதிகரித்தல், நிலையான வருமான வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் சமூக வலுவூட்டலை உறுதிப்படுத்துதல் என்பன பிரதான நோக்கங்களாகக் கொண்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

41 0 0
இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

41 0 0
இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

57 0 0
இலங்கை செய்திகள்

200 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் ஒரே விமானத்தில் இலங்கைக்கு வருகை!

இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான சுற்றுலா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், ‘லிட்டில் ஜப்பான் குரூப்’ (Little Japan Group) அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்ட 200…

62 0 0