குளவிக் கொட்டுக்கு இலக்கான நிலையில் ஆறு தொழிலாளர்கள் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை கவரவலை தோட்ட 200 ஏக்கர் பிரிவில் இன்று காலை 8.30.மணிக்கு தேயிலை கொழுந்து பறித்து கொண்டு இருந்த வேளையில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 15 பெண்களில் நான்கு பெண்கள், இரண்டு ஆண்கள் அதிக அளவில் கொட்டுக்கு இலக்கான நிலையில் உடனடியாக மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கபட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏனைய ஒன்பது பேர் வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வெளியேறினர்.
இவ்வாறு குளவிக் கொட்டுக்கு இலக்கான பெண்கள் நால்வரும் 34 வயது முதல் 55 வயதுக்கு உட்பட்டவர்கள் ஏனைய ஆண்கள் இருவரும் 25, 44 வயதுடைய சுதர்சன் மற்றும் சத்தியசீலன் ஆவர்.
நீண்ட இடைவெளிக்கு பின்னர் இன்று காலை முதல் சற்று வெப்பமான வானிலை நிலவுகிறது. இதன் காரணமாக தேயிலை செடிகள் கீழ் பகுதியில் கட்டப்பட்டிருந்த குளவிக் கூடு கலைந்து கொட்டியதில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது என இப் பகுதியில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.










