உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அதிரடியாக கைது.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
34 பார்வைகள்

சட்டவிரோதமான முறையில் 19 சீனப் பிரஜைகளின் கடவுச்சீட்டுகளைத் தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழும், அவற்றை விடுவிப்பதற்காகப் பல இலட்சம் ரூபாய் இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் கீழும் வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வேயங்கொட பகுதியில் வைத்து அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் இந்த விசேட கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் தலைமையகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
அண்மையில் இராஜகிரிய பகுதியில் வைத்து ஒன்லைன் நிதி மோசடிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 19 சீனப் பிரஜைகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சீனப் பிரஜைகளின் கடவுச்சீட்டுகளை வெலிக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனது கட்டுப்பாட்டின் கீழ் சட்டவிரோதமாக வைத்திருந்துள்ளார்.

பின்னர், அந்த 19 சீனர்களினதும் கடவுச்சீட்டுகளை மீண்டும் அவர்களிடம் ஒப்படைப்பதற்கு, நபர் ஒருவரிடமிருந்து தலா 3 இலட்சம் ரூபாய் வீதம் (மொத்தம் 5.7 மில்லியன் ரூபாய்) இலஞ்சமாக வழங்குமாறு அவர் வற்புறுத்தியுள்ளார்.

இந்த இலஞ்ச பணத்தைக் கோரும் பேரம்பேசலானது குறித்த பொலிஸ் பொறுப்பதிகாரியினால் இடைத்தரகராகச் செயற்பட்ட பெண் ஒருவர் மூலமாகவே சீனத் தரப்பிற்குத் தொடர்பு கொள்ளப்பட்டு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்தச் சட்டவிரோதப் பணக் கோரிக்கை மற்றும் கடவுச்சீட்டு முடக்கம் குறித்து பாதிக்கப்பட்ட தரப்பினால் உரிய அதிகாரிகளிடம் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்யப்பட்டது.

இம்முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முடுக்கிவிட்ட மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம், வெலிக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை வேயங்கொட பகுதியில் வைத்து மடக்கிப் பிடித்துக் கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரான பொலிஸ் பொறுப்பதிகாரியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளைப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர்முதலை தாக்கிப் பலி! கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம்…

32 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

39 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

27 0 0