உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

தொடர் வீழ்ச்சியில் இருந்து மீண்டது இலங்கை ரூபாய்

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
34 பார்வைகள்

சமீபகாலமாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வந்த நிலையில், தற்போது ரூபா மீளவும் பலமடையத் தொடங்கியுள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ நாணய மாற்று விகிதங்களின்படி இந்த விடயம் தெரியவந்துள்ளது.

அதற்கமைய அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை இன்று 318.32 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.

அதேபோல், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று 328.69 ரூபாவாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

சந்தையில் ஏற்பட்டிருந்த சில பொருளாதார அழுத்தங்கள் காரணமாகக் கடந்த சில நாள்களாக ரூபாவின் மதிப்பு சரிவைச் சந்தித்திருந்தது.

இந்த நிலையில், இன்று ரூபா மீண்டும் வலுப்பெற்றிருப்பது இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தக வட்டாரங்கள் மத்தியில் ஓரளவு சாதகமான நிலையை ஏற்படுத்தியுள்ளது என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு
எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

31 0 0
இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

36 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

46 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0