கிளிநொச்சி மாவட்டத்தில் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரவையை பெற்றுக்கொடுத்தல் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் கால்நடை வளர்ப்பார்களுக்கு தேவையான மேய்ச்சல் தரைகளை வனஜீவராசிகள் திணைக்களத்திடம் இருந்து விடுவிக்க மாவட்ட உத்தியோகத்தர்கள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பணிக்கப்பட்டுள்ளது.
அதனை பெற்றுக்கொள்வதற்கு கால்நடை பண்ணையாளர்கள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும்
இரணைமடுக்குளம் வான் பாய்கின்ற பகுதியில் நீர்ப்பாசன எல்லை காணியை இருபக்கமும் நூறுமீற்றர் அடையாளப்படுத்தி மேய்ச்சல் தரவைக்கு ஒதுக்குமாறும்
குறித்த பகுதியில் சட்டவிரோதமாக காணிகள் பிடித்திருந்தால் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நீர்ப்பாசன திணைக்களத்திற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.












