உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

குருக்கள்மடம் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
48 பார்வைகள்

மட்டக்களப்பு குருக்கள்மடம் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு இன்றையதினம் களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் குறித்த வழக்கானது எதிர்வரும் ஜுன் மாதம் 15ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குருக்கள்மடம் பகுதியில் அமைந்துள்ள சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கின் ஸ்கேன் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டமை தொடர்பில் களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

நீதிமன்றின் உத்தரவிற்கு அமைவாக, பேராசிரியர் ராஜ் சோமதேவ அவர்களினால் இந்தப் புதைகுழிப் பகுதியில் நவீன தொழில்நுட்பமான ‘ஆடியோ ஃப்ரீக்வன்சி மேக்னடோ டெல்லூரிக்’ முறைமையைப் பயன்படுத்தி ஸ்கேனிங் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இந்த ஆய்வின் அடிப்படையிலான இறுதி அறிக்கையே இன்று நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பில் ஆராயப்பட்டிருந்தது.

சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை ஆராய்ந்த கௌரவ நீதிமன்றம், இது தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வழக்கினை எதிர்வரும் ஜூன் மாதம் 15ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளதுடன், அன்றைய தினம் திறந்த நீதிமன்றில் இவ்வழக்கினை மீண்டும் அழைப்பதற்கான கட்டளையையும் பிறப்பித்துள்ளது.

1990ஆம் ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொண்டு வந்தவர்கள் குருக்கள்மடம் பகுதியில் ஆயுததாரிகளினால் மறிக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக குரலற்றவர்கள் அமைப்பு களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் தொடுத்த வழக்கின் அடிப்படையில் தொடர்ந்து அது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அங்கு எந்தவித சான்றுப் பொருட்களும் மீட்கப்பட்டாத நிலையில் வழக்காளிகளின் சொந்த செலவில் ஸ்கேன் செய்வற்கு நீதிமன்றம் அனுமதியளித்திருந்தது.

அதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றையதினம் வழக்கு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழில் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் போ*தைப்பொருள் பாவனையாளர்கள்.!

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் – சகாயபுரம் (J/150) எனும் கிராமத்தில் அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனையாளர்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்கு உள்ள காணி ஒன்றில் கூடுகின்ற…

63 0 0
இலங்கை செய்திகள்

மரணப் பொறியிலிருந்து மக்களை மீட்டெடுங்கள்.!

“இந்த அரசு மக்கள் மீது வரிக்கு மேல் வரிகளை விதித்து, வற் வரியை அதிகரித்து, அரச வருமானத்தை அதிகரித்துள்ளது. மக்களை அழிவுக்குள்ளாக்கும் இந்த வரி மரணப் பொறியிலிருந்து…

50 0 0
இலங்கை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் இளைஞன் கைது.!

4 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை(5) அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்…

60 0 0
இலங்கை செய்திகள்

சவூதி சிறையில் அனோஜன் மீது சக கைதிகள் தாக்குதல்.!

சவூதி அரேபியாவில் தற்போது மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் சிறைச்சாலையில் ஏனைய கைதிகளால் தாக்கப்பட்டுள்ளார் எனவும், அவரது தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளன எனவும் மிகவும் கவலைக்குரிய…

65 0 0