• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, May 26, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

சிறப்பாக இடம்பெற்ற செம்பியன்பற்று புனித பிலிப்பு நேரியார் ஆலய திருவிழா.!

Mathavi by Mathavi
May 26, 2026
in இலங்கை செய்திகள்., யாழ் செய்திகள்
0
சிறப்பாக இடம்பெற்ற செம்பியன்பற்று புனித பிலிப்பு நேரியார் ஆலய திருவிழா.!
Share on FacebookShare on Twitter

யாழ். வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று வரலாற்று சிறப்புமிக்க புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தின் வருடாந்த பெருவிழா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ, மக்கள் வெள்ளத்தில் மிகச் சிறப்பாக பக்திப் பரவசத்துடனும் நடைபெற்றது.

இன்று (26) அதிகாலை 6:00 மணியளவில் திருச்செபமாலையுடன் திருவிழா நிகழ்வுகள் ஆரம்பமாகின. அதனைத் தொடர்ந்து, மாலை 6:30 மணியளவில் செம்பியன்பற்று புனித பிலிப்பு நேரியார் ஆலய அருட்பணி சபையினரின் சிறப்பில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி ஆரம்பமானது.

திருப்பலியின் தொடக்கத்தில், வருகை தந்த அருட்தந்தையர்களுக்கு அருட்பணி சபையினரால் மாலை அணிவித்து ஆலய திருப்பீடத்திற்கு பக்திபூர்வமாக அழைத்து வரப்பட்டனர்.

இவ்விழாத் திருப்பலியானது, அமலமரித்தியாகிகள் சபையின் வடமாகாண முதல்வர், வணக்கத்திற்குரிய பிதா அருட்பணி ஜெயந்தன் பச்சேக் அடிகளாரின் தலைமையில் கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.

கடற்கரை நோக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தேர் பவனி
திருப்பலியின் நிறைவாக, புனித பிலிப்பு நேரியாரின் திருச்சொரூபம் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளச் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, திரண்டிருந்த மக்கள் வெள்ளத்திற்கு மத்தியில் தேர் பவனி ஆரம்பமானது.

பக்தர்களின் பக்திப் பரவசக் கோஷங்களுக்கு மத்தியில், செம்பியன்பற்று வடக்கு கடற்கரை பகுதியை நோக்கி தேர் இழுத்துச் செல்லப்பட்டது. இந்த தேர் பவனியின் போது தேருக்கு முன்னும், பின்னும், பக்கவாட்டிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அணிவகுத்துச் சென்றது வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு காட்சியாக அமைந்திருந்தது. பவனியின் இறுதியில் புனிதரின் திருவருள் ஆசீர்வாதம் மக்களுக்கு வழங்கப்பட்டது.

பிரமுகர்கள் மற்றும் புலம்பெயர் மக்களின் பங்கேற்பு
இவ்விழாவில் செம்பியன்பற்று பங்கின் மைந்தர்கள், அயல் பங்குத் தந்தையர்கள், செம்பியன்பற்று பங்குத்தந்தை அருட்பணி ஜஸ்டின் ஆதர், அருட்சகோதரிகள், அருட்சகோதரர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

மேலும், அரசியல் பிரமுகர்களான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களும் இதில் பங்கேற்றனர்.

இவ்வாண்டு திருவிழா திருப்பலியைக் கண்டு ஆசிபெற நாட்டின் பல பாகங்களிலிருந்தும், புலம் பெயர் நாடுகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்திருந்தமை இப்பகுதியின் ஆன்மீக எழுச்சியைக் காட்டுவதாக அமைந்திருந்தது.

Related Posts

போதைப்பொருள் ஒழிப்பு வேட்டை; ஒரே நாளில் 734 பேர் சிக்கினார்கள்.!

சட்டவிரோதமாக புதையல் தோண்டிய ஆறு பேர் கைது.!

by Mathavi
May 26, 2026
0

அரநாயக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மோராகம்மன பகுதியில், அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டிய 06 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் 37 முதல் 62 வயதுக்கு இடைப்பட்ட...

சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து.!

சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து.!

by Mathavi
May 26, 2026
0

மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதான வீதி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்திற்கு முன்பாக தனியார் பேருந்து ஒன்றும் சிறிய ரக பாரவூர்தி ஒன்றும் இன்று செவ்வாய்க்கிழமை (26) நேருக்கு...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொ*லை.!

நீரில் மூழ்கி ஆசிரியர் ஒருவர் உயிரிழப்பு.!

by Mathavi
May 26, 2026
0

கிரிந்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரிந்த கடலில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் படல்கும்பர பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய ஆசிரியர் என தெரியவந்துள்ளது....

கொள்ளையில் ஈடுபட்ட இருவருக்கு விளக்கமறியல்.!

கொள்ளையில் ஈடுபட்ட இருவருக்கு விளக்கமறியல்.!

by Mathavi
May 26, 2026
0

சாமிமலை பகுதியில் உள்ள கவரவலை தோட்ட பி பிரிவில் கடந்த 22 ஆம் திகதி வீட்டார் மஸ்கெலியா கிறிஸ்தவ தேவாலயத்திற்கு வழிபட சென்ற வேளையில் கவரவலை ஏ...

சங்கு கலைக்கழகத்தின் ‘அக்கினிக் குஞ்சு’ நாடக ஆற்றுகை ஒரு பார்வை.!

சங்கு கலைக்கழகத்தின் ‘அக்கினிக் குஞ்சு’ நாடக ஆற்றுகை ஒரு பார்வை.!

by Mathavi
May 26, 2026
0

மலையக மக்களின் வாழ்வியல், கலாச்சாரம் மற்றும் அவர்களின் இருப்புக்கான போராட்டங்களை நவீன அழகியலோடு மேடையேற்றும் ஒரு உன்னத முயற்சியாக, சங்கு கலைக்கழகத்தின் தயாரிப்பில் உருவான ‘அக்கினிக்குஞ்சு’ மேடை...

சுமார் 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலிகளைக் கொள்ளையிட்ட நபர் சிக்கினார்.!

துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் ஒருவர் கைது.!

by Mathavi
May 26, 2026
0

அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலகொட பகுதியில், நேற்று திங்கட்கிழமை (25) இரவு வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பிஸ்டல் ரக துப்பாக்கி மற்றும் அதற்கான 02 தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவர்...

பொய்ப் பிரச்சாரங்கள் மூலம் குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க சஜித்தும் நாமலும் பகற்கனவு.!

பொய்ப் பிரச்சாரங்கள் மூலம் குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க சஜித்தும் நாமலும் பகற்கனவு.!

by Mathavi
May 26, 2026
0

நாட்டில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகப் பொய்ப் பிரச்சாரங்களை மக்கள் மத்தியில் கட்டவிழ்த்து விட்டு, அதன் மூலம் குறுக்கு வழியில் ஆட்சியைக் கைப்பற்றலாம் என எதிர்க்கட்சித் தலைவர்...

சரண குணவர்தனவுக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்பு ஒத்திவைப்பு.!

சரண குணவர்தனவுக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்பு ஒத்திவைப்பு.!

by Mathavi
May 26, 2026
0

ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருந்த முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள நான்கு வழக்குகளின் தீர்ப்புகளையும் ஜூன்...

தமிழர்கள் தங்களது போராட்டத் தலைவர்களை நினைவுகூரக் கூடாது என்று கருதுகின்றது அரசு.!

தமிழர்கள் தங்களது போராட்டத் தலைவர்களை நினைவுகூரக் கூடாது என்று கருதுகின்றது அரசு.!

by Mathavi
May 26, 2026
0

"தங்களுக்கும் தங்களது போராட்டத்துக்கும் தலைமை தாங்கிய விடுதலை வீரர்களை தமிழ் மக்கள் நினைவுகூரக் கூடாது என அரசாங்கம் சிந்திக்கின்றது. அது சரியானது அல்ல. ஆனால் அவ்வாறுதான் ஆளுந்தரப்பு...

ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட வர்த்தகருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட வர்த்தகருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

by Mathavi
May 26, 2026
0

ரூபாய் பத்தாயிரம் தருவதாகக் கூறி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட வர்த்தகரை கல்முனை நீதிவான் நீதிமன்று 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி