உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

தவறான புரிதலால் ஏற்பட்ட சர்ச்சை: 15 வயது சிறுமி விவகாரத்தில் திலும் அமுனுகம மன்னிப்பு கோரல்!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
36 பார்வைகள்

அனுராதபுரம் அட்டமஸ்தானாதிபதி தேரரின் கைது விவகாரம் தொடர்பில் தான் வெளியிட்ட சர்ச்சைக்கரிய கருத்துக்கள், அந்த வழக்கோடு தொடர்புடைய 15 வயது சிறுமியை நோக்கமாகக் கொண்டவை அல்ல என ‘சர்வஜன பலய’ கட்சியின் தேசிய அமைப்பாளர் திலும் அமுனுகம விளக்கமளித்துள்ளார்.

அத்துடன், தனது கருத்தால் எற்பட்ட தவறான புரிதல்கள் குறித்து அவர் தனது வருத்தத்தைத் தெரிவித்து பகிரங்க மன்னிப்பும் கோரியுள்ளார்.

முன்னதாக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில், அட்டமஸ்தானாதிபதி தேரரின் கைது நடவடிக்கை பாலியல் தொழிலாளி ஒருவரின் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டது என திலும் அமுனுகம குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர் ஒரு சிறுமி என ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

அத்துடன் சிறுமியை இத்தகைய பதங்களால் விவரித்த திலும் அமுனுகமவுக்கு எதிராகச் சமூக வலைத்தளங்களில் கடுமையான கண்டனங்களும் விமர்சனங்களும் எழுந்தன.

இந்த விமற்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே திலும் அமுனுகம தனது புதிய விளக்கத்தை அளித்துள்ளார்.

இது  அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-

“என்னுடைய கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் முற்றிலும் திரிபுபடுத்தப்பட்ட முறையிலேயே பரப்பப்பட்டு வருகின்றன.

நான் குறிப்பிட்ட அந்தத் தகவல், நிட்டம்புவ பகுதியில் நடந்த முற்றிலும் வேறொரு சம்பவத்தைப் பற்றி எனக்குக் கிடைத்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டதே தவிர, இந்த வழக்கோடு தொடர்புடைய சிறுமியைப் பற்றியது அல்ல.

எவ்வாறாயினும், ஏற்பட்ட தவறான புரிதல்கள் காரணமாக எனது அந்த அறிவிப்பானது பாதிக்கப்பட்ட சிறுமிக்கோ, அவரது குடும்பத்தினருக்கோ அல்லது சமூகத்தில் உள்ள வேறு எவருக்கோனும் மனவேதனையை ஏற்படுத்தியிருந்தால், அதற்காக நான் எனது ஆழந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதுடன் பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டுக்கொள்கின்றேன்.” – என்று கூறியுள்ளார்.

மேலும், யாருக்கும் அவமதிப்பை ஏற்படுத்தும் நோக்கம் தனக்கு இருக்கவில்லை என்றும்,

தனது இரண்டு தசாப்த கால அரசியல் வாழ்க்கையில் தான் ஒருபோதும் எவர் மீதும் சேறுபூசும் அரசியலிலோ அல்லது தனிநபர் தாக்குதல்களிலோ ஈடுபட்டதில்லை என்றும் திலும் அமுனுகம மேலும் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

66 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

64 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

62 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

47 0 0