உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மூன்றாவது இடம் – அமைச்சரவை விழாவில் மீண்டும் வெடித்த சர்ச்சை!

இந்திய செய்திகள் 4 மாதங்கள் முன்
46 பார்வைகள்

சென்னை  ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்று வரும் தமிழக அமைச்சரவை விரிவாக்க நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவதாக இசைக்கப்பட்டமை மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் வழக்கமாக நடைபெறும் அரசு விழாக்களின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதும், நிகழ்ச்சி நிறைவில் தேசிய கீதம் இசைக்கப்படுவதும் நீண்டகால மரபாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.

ஆனால், தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு இந்த மரபில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

சென்னை நேரு உள்ளக விளையாட்டு அரங்கில் கடந்த மே 10ஆம் திகதி தமிழ் நாட்டின் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் பதவியேற்ற விழாவின் போது, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது.

இதற்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்திருந்தனர்.

இந்த விவாதங்களைத் தொடர்ந்து, இனிவரும் காலங்களில் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் முதலாவதாகவே இசைக்கப்படும் இறுதியாக தேசிய கீதம் இசைக்கப்படும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறுதி அளித்திருந்தார்.

ஆனால், அந்த உறுதிமொழிக்கு மாறாக இன்று ஆளுநர் மாளிகையில் நடைபெறும் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழாவிலும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மூன்றாவது இடமே அளிக்கப்பட்டுள்ளது.

புதிய அரசின் அடுத்தடுத்த இரண்டு முக்கிய நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

44 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

43 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

29 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

47 0 0