மெட்டா நிறுவனம் உலக அளவில் ஏறத்தாழ 8,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்துள்ளது.
உலகெங்கிலும் உள்ள முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடையே செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான கடும் போட்டி நிலவி வருகிறது.
அனைத்து நிறுவனங்களும் செயற்கை நுண்ணறிவில் துரிதமாக முதலீடு செய்து வருகின்றன.
அதை தொடர்ந்து, மெட்டா நிறுவனம் பெருமளவிலான பணிநீக்க நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
சிங்கப்பூரில் அந்த நிறுவனத்தில் பணியாற்றுவோருக்கு நேற்று அதிகாலை 4 மணியளவில் அதற்கான மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டன என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகளின் ஊழியர்களுக்கும் அதே நாளில் மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது.
இந்த மின்னஞ்சல்கள், ஊழியர்களின் வேலைகள் முடித்துக்கொள்ளப்படுவதாக அவர்களுக்குத் தெரிவித்தன.
இதன் படி 8000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுகின்றனர்.
தற்போது பணியில் உள்ள மெட்டா ஊழியர்களுக்கு வீட்டில் இருந்தபடி வேலை செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாகப் பொறியியல் துறையைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் பணிநீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.










