உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஆப்கானிஸ்தானில் பசியின் கொடுமையால் குழந்தைகளை விற்கும் அவலம்!

உலக செய்திகள் 4 மாதங்கள் முன்
36 பார்வைகள்

ஆப்கானிஸ்தானில் நிலவும் கடுமையான வேலையின்மை, வறட்சி மற்றும் சர்வதேச உதவிகள் முடக்கப்பட்டமை காரணமாக, நாட்டின் பெரும்பாலான மக்கள் பட்டிணியால் பாதிக்கப்பட்டுள்ளனர்

இவர்கள் ஒருவேளை உணவிற்காகத் தங்களது சொந்தக் குழந்தைகளையே விற்கும் அதிரவைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் அண்மைக்காலத் தரவுகளின்படி,

ஆப்கானிஸ்தானில் நான்கில் மூன்று பேர் தங்களது அடிப்படைத் தேவைகளைக் கூடப் பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து வருகின்றமை தெரிய வந்துள்ளது .

மேலும், நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் பத்தில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் பஞ்சத்தின் விளிம்பில் வாழ்ந்து வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின் கோர் மாகாணத்தின் தலைநகரான சாக்உயசான் பகுதியில் உள்ள ஒரு தூசு நிறைந்த சதுக்கத்தில், தினமும் நூற்றுக்கணக்கான ஆண்கள் விடிவதற்கு முன்பே கூடுகின்றனர்.

யாராவது தங்களுக்குக் கூலி வேலை தரமாட்டார்களா என்ற ஏக்கத்துடனேயே அவர்கள் காத்திருக்கின்றனர்.

வேலை கிடைக்காத பட்சத்தில்
பசியின் கொடுமை தாங்க முடியாமல், பெற்ற பிள்ளைகளையே விற்கத் துணியும் அவல நிலைக்குப் பெற்றோர் தள்ளப்பட்டுள்ளனர்.

இதற்கு முன்னர் ஆப்கானிஸ்தானுக்கு அதிகளவில் நிதியுதவி வழங்கி வந்த அமெரிக்கா, கடந்த ஆண்டு முதல் தனது மனிதாபிமான உதவிகள் அனைத்தையும் துண்டித்துள்ளது.

பிரித்தானியா உள்ளிட்ட ஏனைய முக்கிய நாடுகளும் தங்களது பங்களிப்பைக் கணிசமாகக் குறைத்துள்ளன.

இதன் காரணமாக, 2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஆப்கானிஸ்தானுக்குக் கிடைத்துள்ள சர்வதேச நிதியுதவி 70 சதவீதத்திற்கும் மேலாகக் குறைந்துள்ளதாக ஐநா தரவுகள் காட்டுகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

94 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

91 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

98 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0