உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மட்டக்களப்பில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மே தின நிகழ்வு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
50 பார்வைகள்

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இலங்கை தமிழரசுக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட மே தின நிகழ்வு இன்று மாலை மட்டக்களப்பு மண்முனை தென் மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட பட்டிப்பளையில் நடைபெற்றது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளை மற்றும் பட்டிப்பளை கிளையின் ஏற்பாட்டிலும் பட்டிப்பளை கிளையின் தலைவருமான அ.கருணாகரன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இதனை முன்னிட்டு கொக்கட்டிச்சோலை சந்தியிலிருந்து மே தின ஊர்வலம் பட்டிப்பளை விளையாட்டு மைதானம் வரையில் சென்றது.

இந்த ஊர்வலத்தில் மே தினத்தினை குறிக்கும் வகையிலான பல்வேறு பதாகைகளை ஏந்திய வகையில் பேரணியானது மே தினம் நடைபெறும் இடத்திற்கு வருகை தந்தது.

இதன்போது முச்சக்கர வண்டி சாரதிகள் அமைப்பு, விவசாய அமைப்பின் உறுப்பினர்கள், முச்சக்கர வண்டிகள், உழவு இயந்திரங்களின் பேரணி மற்றும் மீனவர்கள் தமது படகுகளையும் அணிவகுப்பாக கொண்டு இந்த பேரணி நடைபெற்றது.

அதனை தொடர்ந்து குறித்த மைதானத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மேதின நிகழ்வுகள் நடைபெற்றன.

இலங்கை தமிழரசுக் கட்சியின் பட்டிப்பளை கிளையின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞானமுத்து சிறிநேசன், டாக்டர் இ.சிறிநாத், க.கோடீஸ்வரன், மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது அமைப்புகளின் பிரகடன உரைகள் நடைபெற்றதுடன் தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணியினால் மேதின பிரகடன உரை நிகழ்த்தப்பட்டது.

இன்றைய நிகழ்வின்போது வழமைக்கு மாறாக பட்டிப்பளை, கொக்கட்டிச்சோலை பகுதிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு பெருமளவான பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்ததுடன் வீதி தடைகளும் பல்வேறு இடங்களில் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சர்வதேச சமாதான அமைப்பின் விசேட விருது; 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவரான இலங்கையர் கௌரவிப்பு.!

சர்வதேச சமாதான அமைப்பினால் உலகம் முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்ட சிறந்த விருந்தினருக்கு விருது வழங்கி கௌரவிக்கும் விசேட நிகழ்வு…

55 0 0
இலங்கை செய்திகள்

எருமை மாடுகளை திருடியவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

எருமை மாடுகளை திருடிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதாகிய இரு சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார். சம்மாந்துறை…

66 0 0
இலங்கை செய்திகள்

யாழில் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் போ*தைப்பொருள் பாவனையாளர்கள்.!

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் – சகாயபுரம் (J/150) எனும் கிராமத்தில் அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனையாளர்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்கு உள்ள காணி ஒன்றில் கூடுகின்ற…

73 0 0
இலங்கை செய்திகள்

மரணப் பொறியிலிருந்து மக்களை மீட்டெடுங்கள்.!

“இந்த அரசு மக்கள் மீது வரிக்கு மேல் வரிகளை விதித்து, வற் வரியை அதிகரித்து, அரச வருமானத்தை அதிகரித்துள்ளது. மக்களை அழிவுக்குள்ளாக்கும் இந்த வரி மரணப் பொறியிலிருந்து…

55 0 0