உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

சொந்த மைதானத்தில் கொல்கத்தாவை வீழ்த்திய ஹைதராபாத்!

44 பார்வைகள்

நடந்து வரும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) தொடரில் ஏப்ரல் 02 ஆம் திகதி (நேற்றிரவு) நடைபெற்ற ஆறாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எளிதாக வீழ்ந்தது.

இதனால், நடப்பு ஐபிஎல் தொடரில் தான் சந்தித்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெறாத அணியாக மாறியது.

இந்தத் தோல்வியின் மூலம், அஜிங்க்யா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி புள்ளி அட்டவணையில் ஒன்பதாவது இடத்திற்குச் சரிந்துள்ளது.

அதே நேரத்தில் 2026 ஐபிஎல் சீசனில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்துள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

கொல்கத்தா, ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்றிரவு 07.30 மணிக்கு ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீசுவதற்கு தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இஷான் கிஷான் தலைமையிலான ஹைதராபாத் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 226 ஓட்டங்களை குவித்தனர்.

அணியின் தொடக்க ஜோடியான டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா வெறும் 5.4 ஓவர்களில் 82 ஓட்டங்களை சேர்த்தனர்.

மேலும், 111/2 என்ற நிலையிலிருந்து 118/4 எனச் சரிந்தபோதிலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஒருபோதும் தங்கள் வேகத்தைக் குறைக்கவில்லை.

ஹைதராபாத் சார்பில் அதிகபடியாக டிராவிஸ் ஹெட் 46 (21) ஓட்டங்களையும், அபிஷேக் ஷர்மா 48 (21) ஓட்டங்களையும், ஹென்ரிச் கிளாசென் 52 (35) ஓட்டங்களையும் மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி 39 (24) ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.
கொல்கத்தா அணி சார்பில் பந்து வீச்சில் பிளெஸ்ஸிங் முஸராபானி 4 விக்கெட்டுகளையும் மற்றும் வைபவ் அரோரா 2 விக்கெட்டுகளையும் அதிகபடியாக எடுத்தனர்.

பின்னர் கடினமான இலக்கினை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணியானது 16 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 161 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

கொல்கத்தா சார்பில் அதிகபடியகா அங்கிரிஷ் ரகுவன்ஷி 52 (29) ஓட்டங்களையும், ரிங்கு சிங் 35 (25) ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் ஹைதராபாத் சார்பில் ஜெய்தேவ் உனத்கட் 3 விக்கெட்டுகளையும், ஈஷான் மலிங்க மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் அதிகபடியாக பெற்றனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக நிதீஷ் குமார் ரெட்டி தெரிவானார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு முதலாவது தங்கப் பதக்கம்

ஜப்பானின் நிஷினில் உள்ள கோரோகி விளையாட்டுப் பூங்காவில் இன்று (22) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 147 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்…

39 0 0
விளையாட்டுச் செய்திகள்

தனது இறுதி சர்வதேச போட்டிக்கான சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தினார் மெஸ்ஸி

அர்ஜென்டினா அணிக்காக தனது கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாடவுள்ள கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, அதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளார். அர்ஜென்டினா மற்றும் பெனின் அணிகளுக்கு…

19 0 0
விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து

இலங்கை அணிக்கு எதிராக செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 266 ஓட்டங்கள்…

18 0 0
விளையாட்டுச் செய்திகள்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ஸஹீர் கானுக்கு புதிய பொறுப்பு!

2027 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கு முன்னதாக, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர்…

36 0 0