உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலத்திரனியல் நுழைவாயில்கள் திறப்பு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
26 பார்வைகள்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் அமைக்கப்பட்டுள்ள இலத்திரனியல் நுழைவாயில்கள் (E-Gates) இன்று புதன்கிழமை (28) முதல் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விபரங்களை திணைக்களத்தின் தலைமை அதிகாரி ஜூட் பெர்னாண்டோ வெளியிட்டுள்ளார்.

விமான நிலைய வருகை முனையத்தில் நான்கு இலத்திரனியல் நுழைவாயில்கள் இன்று முதல் பயணிகளின் பயன்பாட்டிற்காகத் திறக்கப்படுகின்றன.

இந்த விசேட ‘இலத்திரனியல் நுழைவாயில்கள் ‘ (e-Gate) திட்டமானது ஜப்பானிய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய முறைமையின் ஊடாக விமான நிலையத்தின் குடிவரவு மற்றும் குடியகல்வு நடவடிக்கைகளின் வினைத்திறனை அதிகரிக்க முடியும் என தலைமை குடிவரவு அதிகாரி ஜூட் பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வசதியானது பயணிகளின் ஆவணப் பரிசோதனைக்கான நேரத்தைக் குறைப்பதற்கும், விமான நிலைய நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கும் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்று மண்ணுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்.!

2026ஆம் ஆண்டுக்கான Inter University Wrestling Championship மல்யுத்தப் போட்டியில் 70 கிலோ எடைப்பிரிவில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த I.F. Angelo முதலாம் Runner-Up இடத்தைப் பெற்று வெள்ளிப்…

50 0 0
இலங்கை செய்திகள்

நீர்கொழும்பை மையமாகக் கொண்டு நடைபெற்ற மூன்று சிறப்பு நிகழ்ச்சிகள்.!

42 ஆவது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழாவிற்கு இணையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சித் தொடரின் மூன்றாவது நாளான இன்று (ஆகஸ்ட் 24), நீர்கொழும்பு பிரதேசத்தை மையமாகக்…

39 0 0
இலங்கை செய்திகள்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டணங்கள் மற்றும் புதிய விதிமுறைகள் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு.!

கொழும்பிலுள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைமையகத்தில் புதுப்பிக்கத்தக்க மின்சார சக்திக்கான கட்டணங்கள் மற்றும் புதிய ஒழுங்குமுறைகள் தொடர்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றையதினம் (24)…

57 0 0
இலங்கை செய்திகள்

யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.!

யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை, பிரதேச சபையின் தலைமை அலுவலக வளாகத்தில்…

41 0 0