• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, June 10, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

நிலப்பறிப்பு வர்த்தமானி பற்றி பதில் தர கடைசி நேரம் வரை கால அவகாசம் கோரும் அரசு.!

Mathavi by Mathavi
June 21, 2025
in இலங்கை செய்திகள்.
0
நிலப்பறிப்பு வர்த்தமானி பற்றி பதில் தர கடைசி நேரம் வரை கால அவகாசம் கோரும் அரசு.!
Share on FacebookShare on Twitter

வடக்கிலுள்ள காணிகள் தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் குறித்து அரசின் முடிவை அறிவிப்பதற்கு எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மீண்டும் கால அவகாசம் வழங்குமாறு உயர் நீதிமன்றத்திடம் சட்டமா அதிபர் கோரியிருக்கின்றமையைச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், இந்த வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் தாம் தீர்மானித்திருப்பதாகக் கூறிய விடயத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசு தயங்குவது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 5 ஆயிரத்து 940 ஏக்கர் காணிகளை 3 மாத காலத்துக்குள் எவரும் சட்ட ரீதியான ஆதாரங்கள், ஆவணங்களுடன் உரிமை கோராதுவிடின், அவை அரச காணிகளாகப் பிரகடனப்படுத்தப்படும் என அரசின் காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவின்கீழ் கடந்த மார்ச் மாதம் 28 ஆம் திகதி பிரசுரிக்கப்பட்ட 2430/25 எனும் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இருப்பினும் அந்த வர்த்தமானி அறிவித்தலை முழுமையாக வாபஸ் பெற வேண்டும் எனக் கோரி வலுப்பெற்ற எதிர்ப்பை அடுத்து, அந்த வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்வதற்கு அரசு தீர்மானித்திருப்பதாக அரசு சார்பில் ஊடக அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அதனை இரத்துச் செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் தற்போது வரை வெளியிடப்படவில்லை.

அதேபோன்று வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்ப் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது காணி அமைச்சர் லால்காந்தவினால் வாக்குறுதி அளிக்கப்பட்டவாறு கடந்த 3 ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது இந்த விவகாரம் பற்றி எந்தவொரு விசேட கூற்றும் வெளியிடப்படவில்லை.

இவ்வாறானதொரு பின்னணியில் இந்த விவகாரம் தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனால் கடந்த 12 ஆம் திகதி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவில், அது குறித்த விசாரணைகள் முடிவடைந்து இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் வரை வடக்கிலுள்ள காணிகள் தொடர்பில் வெளியிடப்பட்ட 2430/25 இலக்க வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதிக்குமாறு கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு கடந்த செவ்வாய்க்கிழமை உயர்நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது, அது குறித்து அமைச்சரவையின் கருத்தைக் கேட்டறிந்து சொல்வதற்காக நேற்று வெள்ளிக்கிழமை வரை சட்டமா அதிபர் தரப்பு கால அவகாசம் கோரியிருந்தது.

நேற்று இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதியரசர்கள் துரைராஜா, சோபித ராஜகருண, சம்பத் விஜேரத்ன ஆகியோர் முன்னிலையில் எடுக்கப்பட்டபோது, கடந்த செவ்வாய்க்கிழமை வழக்குத் தவணைக்குப் பின்னர் அமைச்சரவை இன்னும் கூடவில்லை என்றும், ஆகையினால் வர்த்தமானி அறிவித்தல் குறித்து அமைச்சரவையின் முடிவை அறிந்து தெரிவிப்பதற்கு எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மீண்டும் கால அவகாசம் வழங்குமாறும் சட்டமா அதிபர் தரப்பு கோரியது. அதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

மேற்படி வர்த்தமானி அறிவித்தலின்படி காணி சுவீகரிப்புக்கான கால நிர்ணயம், அந்த வர்த்தமானி வெளியாகி சரியாக மூன்று மாதங்களில் – ஜூன் 29 ஆம் திகதி – சட்ட ரீதியாக அரசுக்கு வரவிருக்கின்றது. அதற்குச் சரியாக முதல் நாள் வரை அரசு இப்போது நீதிமன்றத்தில் கால அவகாசம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இது பற்றி தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன், அதில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

“வடக்கில் 5 ஆயிரத்து 940 ஏக்கர் காணிகளுக்கான தமது உரித்தை நிரூபிக்குமாறு காணி நிர்ணயச் சட்டத்தின் 4 ஆம் பிரிவின்கீழ் 28.03.2025 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானியின் பிரகாரம், காணி உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இம்மாதம் 28 ஆம் திகதியுடன் முடிவடைகின்றது.

அந்த வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் எதிர்ப்பை வெளிப்படுத்தி சட்ட மறுப்புப் போராட்டத்தை நடத்துவது குறித்து நாம் வழங்கிய காலக்கெடு முடிவடைவதற்கு ஒருநாள் இருக்கையில், அதனை மீளப்பெறப் போவதாகக் கடந்த மாதம் 27 ஆம் திகதி அரசு அறிவித்தது. அந்த வாக்குறுதி உடனடியாக நிறைவேற்றப்படும் என நாம் எதிர்பார்த்தோம்.

ஆனால் இரண்டு வாரங்கள் கடந்தும் இந்த வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் செய்யப்படாததன் காரணமாக, அது குறித்து கடந்த 12 ஆம் திகதி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்குத் தாக்கல் செய்தேன்.

கடந்த செவ்வாயன்று இந்த வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அமைச்சரவையின் அறிவுறுத்தல் பெறுவதற்குச் சட்டமா அதிபர் இன்று வரை (நேற்று) கால அவகாசம் கோரியிருந்தார்.

அதனையடுத்து இன்று (நேற்று) வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது அரசின் முடிவை அறிவிப்பதற்கு எதிர்வரும் 27 ஆம் திகதி வரை சட்டமா அதிபர் மீண்டும் கால அவகாசம் கோரியிருக்கின்றார். இது மேற்படி வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டிருக்கும் காலக்கெடு முடிவடைவதற்கு ஒரு நாள் அவகாசத்தை மாத்திரமே கொண்டிருக்கின்றது. அவ்வாறெனில், இந்த வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் தாம் தீர்மானித்திருப்பதாகக் கூறியதை நடைமுறைப்படுத்துவதற்கு அரசு தயங்குவது ஏன்?” – என்று ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Posts

சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளருக்கு எதிராக உறுப்பினர்கள் போர்க்கொடி.!

சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளருக்கு எதிராக உறுப்பினர்கள் போர்க்கொடி.!

by Mathavi
June 10, 2026
0

பெண்களை பாரபட்சமாக நடாத்துவதுடன் எம்மால் திட்டமிட்டு வழங்கப்படும் அபிவிருத்தி நிகழ்வுகளை புறக்கணிப்பு செய்வதாக பல்வேறு குற்றச்சாட்டுக்களை சம்மாந்துறை பிரதேச சபையின் உறுப்பினர்கள் தெரிவித்தனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை...

விபத்தில் சிக்கி இளைஞன் படுகாயம்.!

விபத்தில் சிக்கி இளைஞன் படுகாயம்.!

by Mathavi
June 10, 2026
0

வவுனியா, மன்னார் வீதி நெளுக்குளம் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (9) இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பில பொலிஸார்...

செம்மணிப் புதைகுழியில் இதுவரை 327 எலும்புக்கூடுகள் அடையாளம்.!

செம்மணிப் புதைகுழியில் இதுவரை 327 எலும்புக்கூடுகள் அடையாளம்.!

by Mathavi
June 10, 2026
0

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியின் நேற்றைய (09) அகழ்வாராய்ச்சிப் பணிகளின் போது, பச்சிளம் சிசு மற்றும் சிறுவர்களுடையது என அடையாளம் காணப்பட்ட 8...

தேசிய மக்கள் சக்தி அரசுக்குள்ளும் கோமாளிகள்.!

தேசிய மக்கள் சக்தி அரசுக்குள்ளும் கோமாளிகள்.!

by Mathavi
June 10, 2026
0

"தங்களின் அரசு வீழ்ச்சியடையப் போகின்றது என்று தெரிந்தும், தங்களை மாபெரும் பலசாலிகள் எனக் கூறிக்கொண்டு நாடாளுமன்றிலும் வெளியிலும் வீணாகக் கூச்சலிடும் கோமாளிகளாலேயே கடந்த காலங்களில் ஆட்சிகள் கவிழ்ந்தன"...

ஒட்டுமொத்த மக்களும் வீதிகளில் இறங்கிப் போராடுவார்கள்! – அரசுக்குச் சஜித் எச்சரிக்கை

ஒட்டுமொத்த மக்களும் வீதிகளில் இறங்கிப் போராடுவார்கள்! – அரசுக்குச் சஜித் எச்சரிக்கை

by selvan
June 10, 2026
0

"அரசின் இந்த ஒடுக்குமுறைச் சூழலைத் தாங்கிக்கொள்ள முடியாமல் ஒட்டுமொத்த மக்களும் வீதிகளில் இறங்கிப் போராடும் நாள் வெகுதொலைவில் இல்லை" என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எச்சரித்துள்ளார்....

பயங்கரவாதத் தடைச் சட்டம் விரைவில் முற்றாக நீக்கப்படும்!

பயங்கரவாதத் தடைச் சட்டம் விரைவில் முற்றாக நீக்கப்படும்!

by selvan
June 9, 2026
0

"அடக்குமுறைச் சட்டங்களை நடைமுறைப்படுத்தி நாட்டை ஆள வேண்டிய அவசியம் தற்போதைய அரசுக்குக் கிடையாது. எமது பின்னால் பலமிக்க மக்கள் ஆணை காணப்படுகின்றது. எனவே, பயங்கரவாதத் தடைச் சட்டம்...

சாய்ந்தமருது அல்-ஹிலால் பாடசாலை சதுரங்கத்தில் மீண்டும் சாதனை

சாய்ந்தமருது அல்-ஹிலால் பாடசாலை சதுரங்கத்தில் மீண்டும் சாதனை

by selvan
June 9, 2026
0

இலங்கை பாடசாலை சதுரங்க சங்கத்தின் ஏற்பாட்டில், கல்முனை வலய பாடசாலைகளுக்கிடையிலான சதுரங்கப் போட்டி 06 மற்றும் 07 ஆம் திகதிகளில் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியில் இடம்பெற்றது....

அரச தரப்புப் பாடினால் சட்டவிலக்கா?தமிழ் இளைஞர் பாடினால் கைதா? – நாமல் கேள்வி

அரச தரப்புப் பாடினால் சட்டவிலக்கா?தமிழ் இளைஞர் பாடினால் கைதா? – நாமல் கேள்வி

by selvan
June 9, 2026
0

"உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிரச்சாரங்களின் போது, தேசிய மக்கள் சக்தியின் அரசியல்வாதிகள் விடுதலைப் புலிகள் அமைப்பின் கருப்பொருள் கொண்ட பாடல்களைத் தங்களின் அரசியல் தேவைகளுக்காகப் பயன்படுத்திய போதும்,...

சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தின் உலக சுற்றாடல் தின நிகழ்வுகள் 

சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தின் உலக சுற்றாடல் தின நிகழ்வுகள் 

by selvan
June 9, 2026
0

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைய க்ளீன் ஶ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்ட செயலகத்தின் அறிவுறுத்தலுக்கமைய நேற்று (08) திங்கட்கிழமை பாடசாலையில் இடம்பெற்றது....

பொருளாதாரத்தைப் படுகொலை செய்தவர்களே இன்று பொருளாதாரம் பற்றிப் பேசுகின்றார்கள்!

பொருளாதாரத்தைப் படுகொலை செய்தவர்களே இன்று பொருளாதாரம் பற்றிப் பேசுகின்றார்கள்!

by selvan
June 9, 2026
0

"முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷக்கள் ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதாரத்தையும் படுகொலை செய்தவர்கள் என்று நாட்டின் உயர்நீதிமன்றமே ஏகமனதாகத் தீர்ப்பளித்துள்ளது. அவ்வாறு நாட்டை வங்குரோத்து நிலைக்குத்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி