• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, June 10, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

தேசிய மக்கள் சக்தி அரசுக்குள்ளும் கோமாளிகள்.!

Mathavi by Mathavi
June 10, 2026
in இலங்கை செய்திகள்.
0
தேசிய மக்கள் சக்தி அரசுக்குள்ளும் கோமாளிகள்.!
Share on FacebookShare on Twitter

“தங்களின் அரசு வீழ்ச்சியடையப் போகின்றது என்று தெரிந்தும், தங்களை மாபெரும் பலசாலிகள் எனக் கூறிக்கொண்டு நாடாளுமன்றிலும் வெளியிலும் வீணாகக் கூச்சலிடும் கோமாளிகளாலேயே கடந்த காலங்களில் ஆட்சிகள் கவிழ்ந்தன” என்று எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் தற்போதைய அரசின் செயல்பாடுகள் மற்றும் எரிபொருள் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடிகள் குறித்து இவ்வாறு கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

அரச தரப்பினரின் தற்போதைய போக்கு குறித்து அவர் மேலும் பேசுகையில்,
“எங்களுடைய அரசு வீழ்ச்சியடையும் கடைசித் தருணத்திலும்கூட, தங்களைச் சர்வ வல்லமை படைத்தவர்களாக நினைத்துக்கொண்டு இப்படியான சில கோமாளிகள் எம்மோடு இருந்தார்கள். அவர்களின் தவறான வழிகாட்டல்களாலேயே அன்று எமது ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

அதேபோன்றதொரு துரதிர்ஷ்டவசமான சூழல்தான் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசிலும் அரங்கேறி வருகின்றது. தற்போதும் அத்தகைய கோமாளிகளே இந்த அரசுக்குள்ளும் நிறைந்திருக்கின்றார்கள். அவர்கள் எங்களை நோக்கி எவ்வளவு வேண்டுமானாலும் கூச்சலிடட்டும், திட்டட்டும், நாங்கள் அனைத்தையும் அரசியல் ரீதியாக எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றோம். உங்களின் சவால்களுக்கு எவ்வாறு முறையான பதிலடி கொடுப்பது என்பதை மிக விரைவில் நாங்கள் உங்களுக்குக் கற்றுக் கொடுப்போம்.” – என்று எச்சரித்தார்.

தொடர்ந்து நாட்டில் நிலவும் எரிபொருள் விலை உயர்வு மற்றும் பொருளாதார நெருக்கடி குறித்துப் பேசிய அவர்,
“இன்று நாட்டின் உண்மையான பொருளாதார நிலைமை என்னவென்றால், ஒட்டுமொத்த வணிகத் துறையும் தற்போது முற்றாகச் சரிவைச் சந்தித்துள்ளது. இந்த நாட்டில் இயங்கும் பெரும்பான்மையான சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வணிக நடவடிக்கைகளுக்கும், பாரிய தொழிற்சாலைகளுக்கும் எரிபொருளும் எண்ணெயும் மிக அத்தியாவசியமான மூலப்பொருட்களாகும்.

அவ்வாறானதொரு இக்கட்டான நிலையில், உலகச் சந்தையைக் காரணம் காட்டி உள்நாட்டில் எரிபொருட்களின் விலையைத் தொடர்ந்து அதிகரிப்பதன் மூலம், நலிவடைந்து வரும் இந்தத் தொழில்துறைகளுக்கும் அதனை நம்பியுள்ள இலட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கும் தற்போதைய அரசு வழங்கும் தீர்வு அல்லது மாற்றுப் பலன் என்ன?” – என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

Related Posts

சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளருக்கு எதிராக உறுப்பினர்கள் போர்க்கொடி.!

சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளருக்கு எதிராக உறுப்பினர்கள் போர்க்கொடி.!

by Mathavi
June 10, 2026
0

பெண்களை பாரபட்சமாக நடாத்துவதுடன் எம்மால் திட்டமிட்டு வழங்கப்படும் அபிவிருத்தி நிகழ்வுகளை புறக்கணிப்பு செய்வதாக பல்வேறு குற்றச்சாட்டுக்களை சம்மாந்துறை பிரதேச சபையின் உறுப்பினர்கள் தெரிவித்தனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை...

விபத்தில் சிக்கி இளைஞன் படுகாயம்.!

விபத்தில் சிக்கி இளைஞன் படுகாயம்.!

by Mathavi
June 10, 2026
0

வவுனியா, மன்னார் வீதி நெளுக்குளம் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (9) இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பில பொலிஸார்...

செம்மணிப் புதைகுழியில் இதுவரை 327 எலும்புக்கூடுகள் அடையாளம்.!

செம்மணிப் புதைகுழியில் இதுவரை 327 எலும்புக்கூடுகள் அடையாளம்.!

by Mathavi
June 10, 2026
0

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியின் நேற்றைய (09) அகழ்வாராய்ச்சிப் பணிகளின் போது, பச்சிளம் சிசு மற்றும் சிறுவர்களுடையது என அடையாளம் காணப்பட்ட 8...

ஒட்டுமொத்த மக்களும் வீதிகளில் இறங்கிப் போராடுவார்கள்! – அரசுக்குச் சஜித் எச்சரிக்கை

ஒட்டுமொத்த மக்களும் வீதிகளில் இறங்கிப் போராடுவார்கள்! – அரசுக்குச் சஜித் எச்சரிக்கை

by selvan
June 10, 2026
0

"அரசின் இந்த ஒடுக்குமுறைச் சூழலைத் தாங்கிக்கொள்ள முடியாமல் ஒட்டுமொத்த மக்களும் வீதிகளில் இறங்கிப் போராடும் நாள் வெகுதொலைவில் இல்லை" என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எச்சரித்துள்ளார்....

பயங்கரவாதத் தடைச் சட்டம் விரைவில் முற்றாக நீக்கப்படும்!

பயங்கரவாதத் தடைச் சட்டம் விரைவில் முற்றாக நீக்கப்படும்!

by selvan
June 9, 2026
0

"அடக்குமுறைச் சட்டங்களை நடைமுறைப்படுத்தி நாட்டை ஆள வேண்டிய அவசியம் தற்போதைய அரசுக்குக் கிடையாது. எமது பின்னால் பலமிக்க மக்கள் ஆணை காணப்படுகின்றது. எனவே, பயங்கரவாதத் தடைச் சட்டம்...

சாய்ந்தமருது அல்-ஹிலால் பாடசாலை சதுரங்கத்தில் மீண்டும் சாதனை

சாய்ந்தமருது அல்-ஹிலால் பாடசாலை சதுரங்கத்தில் மீண்டும் சாதனை

by selvan
June 9, 2026
0

இலங்கை பாடசாலை சதுரங்க சங்கத்தின் ஏற்பாட்டில், கல்முனை வலய பாடசாலைகளுக்கிடையிலான சதுரங்கப் போட்டி 06 மற்றும் 07 ஆம் திகதிகளில் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியில் இடம்பெற்றது....

அரச தரப்புப் பாடினால் சட்டவிலக்கா?தமிழ் இளைஞர் பாடினால் கைதா? – நாமல் கேள்வி

அரச தரப்புப் பாடினால் சட்டவிலக்கா?தமிழ் இளைஞர் பாடினால் கைதா? – நாமல் கேள்வி

by selvan
June 9, 2026
0

"உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிரச்சாரங்களின் போது, தேசிய மக்கள் சக்தியின் அரசியல்வாதிகள் விடுதலைப் புலிகள் அமைப்பின் கருப்பொருள் கொண்ட பாடல்களைத் தங்களின் அரசியல் தேவைகளுக்காகப் பயன்படுத்திய போதும்,...

சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தின் உலக சுற்றாடல் தின நிகழ்வுகள் 

சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தின் உலக சுற்றாடல் தின நிகழ்வுகள் 

by selvan
June 9, 2026
0

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைய க்ளீன் ஶ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்ட செயலகத்தின் அறிவுறுத்தலுக்கமைய நேற்று (08) திங்கட்கிழமை பாடசாலையில் இடம்பெற்றது....

பொருளாதாரத்தைப் படுகொலை செய்தவர்களே இன்று பொருளாதாரம் பற்றிப் பேசுகின்றார்கள்!

பொருளாதாரத்தைப் படுகொலை செய்தவர்களே இன்று பொருளாதாரம் பற்றிப் பேசுகின்றார்கள்!

by selvan
June 9, 2026
0

"முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷக்கள் ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதாரத்தையும் படுகொலை செய்தவர்கள் என்று நாட்டின் உயர்நீதிமன்றமே ஏகமனதாகத் தீர்ப்பளித்துள்ளது. அவ்வாறு நாட்டை வங்குரோத்து நிலைக்குத்...

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளுக்கு இடையூறு விளைவித்தால் சட்ட நடவடிக்கை – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளுக்கு இடையூறு விளைவித்தால் சட்ட நடவடிக்கை – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!

by selvan
June 9, 2026
0

"உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் உள்ளிட்ட முக்கிய வழக்குகள் தொடர்பாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் மிக விசேட விசாரணைகளை எக்காரணம் கொண்டும் தடுத்து நிறுத்த...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி