• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, May 31, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

அத்துமீறி நுழைந்த பசு; நுழைவாயிலில் அமர்ந்து உரிமையாளர் போராட்டம்.!

Mathavi by Mathavi
April 9, 2025
in இலங்கை செய்திகள்., யாழ் செய்திகள்
0
அத்துமீறி நுழைந்த பசு; நுழைவாயிலில் அமர்ந்து உரிமையாளர் போராட்டம்.!
Share on FacebookShare on Twitter

உரிமையாளரால் மேச்சலுக்காக கட்டவிழ்த்து விடப்பட்ட பசு மாடு ஒன்று வேலணை பிரதேச சபை வளாகத்துக்குள் நுழைந்து தாவரங்களை தின்று சேதமாக்கியதால் குறித்த பசுமாட்டடை பிரதேச சபையினர் சட்டத்தின்படி பிடித்து கட்டிவைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலணை நகர்ப்பகுதியில் கால்நடை பண்ணை நடத்திவரும் பெண் உரிமையாளர் ஒருவர் பிரதேச செயலக நுழைபாதையை வழிமறித்து போராட்டம் ஒன்றை இன்றையதினம் (09.04.2025) முன்னெடுத்ததால் குறித்த பகுதியில் சிலமணி நேரம் குழப்பநிலை ஏற்பட்டிருந்தது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

வேலணை நகர்ப் பகுதியில் பால் உற்பத்தியை மையமாக கொண்டு சுயதொழிலாக பசு மாடு வளர்ப்பில் ஈடுபட்டுவரும் பெண் ஒருவரது பசுமாடு ஒன்று கட்டவிழ்த்து விடப்பட்ட நிலையில், வேலணை நகர் பகுதியில் அமைந்துள்ள பிரதேச சபை வளாகத்துக்குள் நுழைந்து அங்கிருந்த சிறு தாவரங்களை சேதப்படுத்தியதாக கூறி பிரதேச சபையின் ஊழியர்களால் குறித்த பசுமாடு பிடிக்கப்பட்டு முதற்கட்ட நடவடிக்கையான உரிமையாளர் தேடிவரும் வரையான சட்ட விதிமுறைகளுக்கேற்ப தமது பராமரிப்பில் வைத்திருந்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த பசுமாட்டின் உரிமையாளர் இரண்டாவது நாளான இன்று பிரதேச சபையின் பொறுப்பில் குறித்த பசுமாடு இருப்பதை அறிந்துகொண்டு அதை பிரதேச சபை சட்டமுரணாக பிடித்து கட்டிவைத்துள்ளதாக தெரிவித்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாட்டை விடுவிக்குமாறு கோரி தான் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார்

மேலும் தான் மாடு வளர்ப்பு தொழிலை பல இலட்சங்கள் முதலீடு செய்து மேற்கொண்டுவரும் நிலையில், தற்போது நிலவும் வெப்பமான காலநிலையை கருத்தில் கொண்டு மாடுகளின் நலன்கருதி அவற்றை அவிழ்த்து விட்டதாகவும் அவ்வாறான நிலையில், ஒரு பசு மாடு குறித்த பிரதேச சபையின் வளாகத்துக்குள் சென்றதாக கூறி பிடித்து கட்டிவைக்கப்பட்டுள்ளது.
இது சட்டமுரணானது. இவ்வாறான நிலை எமது தொழிலை பாதிக்கின்றது. எனவே சட்டத்துக்கு முரணாக பிரதேச சபையால் பிடித்து வைக்கப்பட்டுள்ள பசு மாட்டை தண்டங்கள் இன்றி விடுவிக்க வேண்டும் எனவும், இனிமேல் இவ்வாறு மாடுககள் பிடிக்கப்படக்கூடாது எனவும் கோரியே போராட்டத்தை முன்னெடுத்துள்ளேன் என தெரிவித்தார்.

இது தொடர்பில் வேலணை பிரதேச சபையின் செயலரிடம் கேட்டபோது,
எமது பிரதேசத்தில் கால்நடைகளால் வருடாவருடம் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுவருகின்றன. கட்டாக்காலி மாடுகள் ஒருபுறமிருக்க வளர்ப்பு மாடுகள் கட்டவிழ்த்து விடப்படுவதால் ஏற்படும் பிரச்சினைகளும் நாளாந்தம் காணப்படுகின்றது.
இதேநேரம் வளர்ப்பு பிராணிகளை கட்டி வளர்க்க வேண்டியது உரிமையாளர்கள் ஒவ்வொருவரதும் பொறுப்பாகும்.

குறிப்பாக வங்களாவடி சந்தி பகுதியை அண்டிய சூழலில் மாலை 6 மணிக்கு பின்னர் நாளாந்தம் 50 க்கு மேற்பட்ட மாடுகள் வீதிகளில் தமது இரவு நேரத்தை கழிக்கின்றன. இதனால் நாளாந்தம் விபத்துக்களும் ஏற்படுகின்றன. ஒருசில பாரிய விபத்துக்களும் ஏற்பட்டுள்ளன.

இதேநேரம் வீட்டுப் பயிர்களை அழிப்பதாகவும் எமக்கு முறைப்பாடுகள் கிடைத்துவருகின்றன. குறித்த வீதியில் உறங்கும் மாடுகளில் அதிகமானவை வளர்ப்பு மாடுகளாகவே இருக்கின்றன. இதை கட்டுப்படுத்துமாறும் தொடர்ச்சியாக எமக்கு முறைப்பாடுகள் கிடைத்து வருகின்றன. நாம் மக்களின் நலன்களை கருத்திற்கொண்டே செயற்பட்டு வருகின்றோம். எமது சபைக்கு கட்டாக்காலி மாடுகளானாலும் சரி வளர்ப்பு மாடுகளானாலும் சரி ஆபத்துக்கள் மற்றும் சேதங்களை ஏற்படுத்தும் வகையில் இருந்தால் அல்லது நுழைந்தால் பிடிப்பதற்கும் அதற்கு சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் அதிகாரம் உண்டு.

கடந்த மாதம் நடைபெற்ற வேலணை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் வகையில் உலாவுகின்ற மாடுகள் மற்றும் கட்டாக்காலிகள் தொடர்பில் ஏன் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை? அல்லது அது தொடர்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரால் கேள்வி எழுப்பப்பட்டது.

அதன்பின்னர் இவ்வாறான அசௌகரியங்களை உண்டுபண்ணும் கால்நடைகளை கட்டப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டது.
குறித்த கூட்டத்தில் எவரும் மாடுகளை பிடிக்க வேண்டாம், தண்டப்பணம் அறவிட வேண்டாம் என கூறவில்லை. நடவடிக்கை எடுக்குமாறே வலியுறுத்தியிருந்தனர்.

இதேவேளை குறித்த பெண் இவ்வாறான சம்பவம் தொடர்பில் பலமுறை பிரதேச சபைக்கு தண்டம் செலுத்தியும் ஒரு தடவை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தண்டிக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டு தண்டமும் செலுத்திய ஒருவர்.

அவ்வாறான சம்பவம் ஒன்றே இன்றும் நடந்துள்ளது. நாம் சட்டத்தை தான் செய்தோம். எவரது கால்நடைகளும் இன்னொருவரது வீடுகளுக்கோ அல்லது பொது நிறுவனங்களின் வளாகத்துக்குள்ளோ சென்றால் அல்லது நாசங்களை ஏற்படுத்தினால் அதை பிடித்து அதற்கான நடவடிக்கை எடுக்க முடியும்.

எனவே வளர்ப்பு மாடுகளை ஒவ்வொருவரும் தத்தமது வளர்ப்பிடங்களில் பாதுகாப்பாக பராமரிக்க வேண்டுமே தவிர அவற்றை கட்டவிழ்து விடுவது இவ்வாறான பிரச்சினைகளையே ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துடன் குறித்த பசு மாட்டின் உரிமையாளர் பிரதேச சபையின் சட்டங்களின் பிரகாரம் அதற்கான தண்டப்பணமாக 5600 ரூபாவினை செலுத்தியே இன்றும் தனது பசுமாட்டை மீட்டுச் சென்றுள்ளார் என்றும் தெரிவித்திருந்த குறிப்பிடத்தக்கது.

Related Posts

எரிபொருள் விலைகளில் அதிரடி மாற்றம்!

எரிபொருள் விலைகளில் அதிரடி மாற்றம்!

by selvan
May 30, 2026
0

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதன்படி, ஒட்டோ டீசல் 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 407...

தொலைபேசிக்காக தனது சகோதரியை கொலை செய்த சிறுவன்! – ஏறாவூரில் சம்பவம்

தொலைபேசிக்காக தனது சகோதரியை கொலை செய்த சிறுவன்! – ஏறாவூரில் சம்பவம்

by selvan
May 30, 2026
0

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வீடு ஒன்றில் தனிமையில் இருந்த 11 வயது சகோதரி வைத்திருந்த கையடக்க தொலைபேசியை தர மறுத்த காரணத்தால் அவரை கழுத்தை நெரித்து கொலை...

ஹம்பாந்தோட்டையில் கடலில் நீராடச் சென்ற 3 மாணவர்கள் மாயம்!

ஹம்பாந்தோட்டையில் கடலில் நீராடச் சென்ற 3 மாணவர்கள் மாயம்!

by selvan
May 30, 2026
0

ஹம்பாந்தோட்டை, ஹுங்கம, களமெட்டிய கடற்பகுதியில் நீராடச் சென்ற 3 பாடசாலை மாணவர்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில்,bஅவர்களை தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வித்தியா வழக்கின் கொ*லையாளி ஜெயக்குமாரின் சடலம் அரச செலவில் அடக்கம் செய்யப்பட்டது

வித்தியா வழக்கின் கொ*லையாளி ஜெயக்குமாரின் சடலம் அரச செலவில் அடக்கம் செய்யப்பட்டது

by selvan
May 30, 2026
0

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யாவின் கொலை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த கைதியான பூபாலசிங்கம் ஜெயக்குமாரின் இறுதி கிரியை இன்று நடைபெற்றுள்ளது. யாழ்ப்பாணம் கோம்பையன் இந்துமயானத்தில்,...

மஸ்கெலியாவில் வெசாக் தின நிகழ்வுகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டன

மஸ்கெலியாவில் வெசாக் தின நிகழ்வுகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டன

by selvan
May 30, 2026
0

மஸ்கெலியாவில் இன்றைய தினம் சிறப்பு வெசாக் ஊர்வலம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 2570 வது வைசாத்தி மங்கள்ய வருடத்தை முன்னிட்டு சுமனாராம விகாரையின் பௌத்த மத குரு தப்போவன...

தமது பூர்வீகக் காணிகளைத் தங்களிடம் மீளக் கையளிக்குமாறு கோரி தையிட்டியில் போராட்டம்!

தமது பூர்வீகக் காணிகளைத் தங்களிடம் மீளக் கையளிக்குமாறு கோரி தையிட்டியில் போராட்டம்!

by selvan
May 30, 2026
0

யாழ். தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை அமைந்துள்ள தங்களது பூர்வீகக் காணிகளைத் தங்களிடம் மீளக் கையளிக்குமாறு கோரி, நேற்றும் இன்றும் காணி உரிமையாளர்கள் தொடர்...

சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்காக இருவருக்கு சுமந்திரன் நிதியுதவி

சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்காக இருவருக்கு சுமந்திரன் நிதியுதவி

by selvan
May 30, 2026
0

இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக நிதியுதவி கோரியிருந்த முன்னாள் போராளி எதிர்மன்னசிங்கம் கிரேசியனை, இலங்கைத் தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் நேரில்...

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற நான்கு விபத்துக்களில் நால்வர் உயிரிழப்பு!

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற நான்கு விபத்துக்களில் நால்வர் உயிரிழப்பு!

by selvan
May 30, 2026
0

இலங்கையின் பல பகுதிகளில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கோர வாகன விபத்துகளில் சிக்கி நால்வர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதற்கமைய கேகாலையின் ருவன்வெல்ல பொலிஸ்...

இராணுவத்தின் புதிய பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமனம்!

இராணுவத்தின் புதிய பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமனம்!

by selvan
May 30, 2026
0

இலங்கை இராணுவத்தின் 69ஆவது பதவி நிலை பிரதானியாக இலங்கை பீரங்கிப் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இந்த விசேட உயர் பதவி நியமனமானது...

தையிட்டி விகாரையை படம் எடுத்த இளைஞர்கள் இருவர் கைது.!

தையிட்டி விகாரையை படம் எடுத்த இளைஞர்கள் இருவர் கைது.!

by Mathavi
May 30, 2026
0

யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரைப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடி, புகைப்படங்களை எடுத்த வடமராட்சி பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்களை பலாலி பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்....

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி