எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளும் செயற்பாடு கடந்த 17 ஆம் திகதி முதல் இடம்பெற்று வருகின்றது.
அந்தவகையில் வவுனியா மாநகரசபையில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி இன்று தாக்கல் செய்தது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில், கூட்டணியின் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் சகிதம் தமது வேட்புமனுவை இன்று மாலை கையளித்திருந்தனர்.
வவுனியா மாவட்டத்தில் உள்ள நான்கு உள்ளூராட்சி சபைகளில் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி சங்கு சின்னத்தில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


