காதல் உறவை முடித்துக்கொள்வோம்’ என தெரிவித்த காதலியை குத்திக் கொன்றுவிட்டேன் எனக்கூறி இளைஞன் ஒருவன் பொலிஸில் சரணடைந்துள்ளார்.
சந்தேக நபர் நேற்று (18) மாலை 05.30 மணியளவில் பொலிஸ் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
வென்னப்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாய்க்கல பாடசாலைக்கு அருகில் உள்ள வீடொன்றில் இந்த கொ லைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வென்னப்புவ – வாய்க்கலையில் உள்ள பாடசாலைக்கு அருகில் வசித்து வந்த 19 வயதுடைய விமல்கா துஷாரி என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண் மாரவில – வீரஹேன பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய சந்தேக நபருடன் சுமார் ஒன்றரை வருடங்களாக தொடர்பு கொண்டிருந்தார்.
இந்த காதல் உறவை நிறுத்துவோம்’ என காதலனிடம் காதலி கூறியதாகவும், இது தொடர்பாக காதலியின் வீட்டில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து இந்த கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
படுகாயமடைந்த பெண் சிகிச்சைக்காக நீர்கொழும்பு பொது வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.