இரத்தினபுரி பிரதேசத்தில் அரச வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி நபரொருவரிடமிருந்து 50 இலட்சத்து 5 ஆயிரம் ரூபா இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இரத்தினபுரி பதலங்கல மற்றும் கடிகல ஆகிய பிரதேசங்களில் வசிப்பவர்கள் ஆவார்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களை எம்பிலிபிட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.