திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மின்பிறப்பாக்கியின் செப்புக் கம்பியைத் திருட முற்பட்ட நபர் ஒருவர் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை நெல்சன் திரையரங்குக்கு முன்னால் உள்ள மக்கெய்சர் விளையாட்டரங்கின் மூலையில் உள்ள மின் பிறப்பாக்கியில் புவித்தொடுப்பு வயரில் இருந்த செப்புக் கம்பியை வெட்டித் திருட முயற்சித்தபோதே இவருக்கு மின்சாரம் தாக்கியுள்ளது.
பின்னர் அந்த நபர் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், அண்மைக்காலமாக பின் பிறப்பாக்கியில் உள்ள செப்புக்கம்பி வயர்கள் வெட்டப்பட்டு வருகின்றன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.