இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர் ஜே.ஆர். ஜயவர்தனவின் பேரன் பிரதீப் ஜயவர்தன, சர்வஜன அதிகாரம் கட்சியுடன் இணைந்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து, ஐக்கிய மக்கள் சக்தி பக்கம் தாவியிருந்த நிலையிலேயே அவர் தற்போது மீண்டும் கட்சி தாவியுள்ளார்.
அவருடன் இணைந்து மேலும் சில பிரதேச அரசியல்வாதிகளும் சர்வஜன அதிகாரம் கட்சியுடன் இணைந்துள்ளனர்.
ADVERTISEMENT
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சர்வஜன அதிகாரம் கட்சியின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காகவே இணைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.